இங்கே ஒரு பூனைக்குட்டி ஒளிஞ்சு இருக்கு.. கண்டுபிடிச்சி கொடுங்க பாஸ்.. 11 செகண்ட்ஸ் தான் டைம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், பூனை பொம்மை குவியல்களுக்கு மத்தியில் ஹாயாக ஒரு நிஜ பூனை மறைந்து உள்ளது. அந்த பூனையை 11 செகண்டுக்கள் கண்டுபிடித்தால் நீங்கள் கழுகுக்கண் பார்வை கொண்டவர்தான்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு இணையத்தில் எப்போதும் தனி வரவேற்பு உள்ளது.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் என்றால் என்ன? என்பதற்கு சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், வெளிப்படையாக விடைகள் கிடைக்காது.

ஆப்டிகல் இல்யூஷன்

ஆப்டிகல் இல்யூஷன்

சற்று வித்தியாசமாகவும் ஆழ்ந்து யோசித்தால் மட்டுமே இல்யூஷன் படங்களில் உண்மையான விடையை கண்டுபிடிக்க முடியும். ஏனென்றால் இல்யூஷன் படங்கள் மேலோட்டமாக பார்த்தால் ஒரு மாதிரியாகவும் ஆழ்ந்து கவனித்தால் வேறு மாதிரியாகவும் இருக்கும். இன்னும் சொல்லப்போனால் நமது கண்களை குழப்பக்கூடியவை. சில நேரங்களில் தலையை பிய்த்துக்கொள்ளும் அளவுக்கு நம்மை யோசிக்க வைக்கும்.

பூனை விரும்பிகளுக்கு

பூனை விரும்பிகளுக்கு

இப்படி எளிதில் விடைகள் கிடைக்காது என்பதால் இல்யூஷன் படங்களை பலரும் தங்கள் நட்பு வட்டங்களுக்கு அனுப்பி அவர்களுடன் போட்டி போட்டு விடையை கண்டு பிடித்து வருகின்றன்ர். இப்படி இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கொஞ்சம் சுவாரசியம் ஆனது. ஏனென்றால் இங்கே இருக்கும் படத்தை பாருங்கள். படத்தை பார்த்ததுமே பலரும் செல்லப்பிராணிகள் குறிப்பாக பூனை விரும்பிகளுக்கு குதூகலத்தை கொடுத்திருக்கும்.

பூனை எங்க இருக்கு

பூனை எங்க இருக்கு

இங்கே மொத்தமாக பூனை பொம்மைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. மஞ்சள், வெள்ளை என பல வண்ணங்களில் இருக்கும் இந்த பூனை பொம்மைகளுக்கு மத்தியில் ஒரு உண்மையான பூனையும் ஒளிந்து இருக்கிறது. இதைக் கண்டுபிடிப்பதுதான் உங்களின் இன்றைய டாஸ்க்... டிக்-டாக்கில் தான் முதன் முதலாக இந்த இல்யூஷன் படங்கள் வெளியாகி பலரையும் குழப்பி விட்டு இருந்தது. இங்க இருக்கும் பூனையை 11 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதால் சிலர் தடுமாறிவிட்டனர். உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா? பார்க்கலாம்.

கண்களுக்கு தெரிகிறதா

கண்களுக்கு தெரிகிறதா

டைம் ஸ்ட்ராட்.. 1.. 2.. 3....11.. சரி ஒகே டைம் ஓவர். 11 செகண்டிற்குள் கண்டுபிடித்தவர்கள் எல்லாம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். உங்களின் கவனிப்புத்திறன் அபாரமாக இருக்கிறது. கண்டுபிடிக்காதவங்களும் டோண்ட் வொர்ரி... விடையை இங்கே வட்டமிட்டு காண்பித்து இருக்கிறோம். நீங்களே கண்டுபிடிங்க.... படத்தின் இடது பக்கத்தில் பூனையின் கண்கள் மட்டும் தெரிகிறதா?.... பார்த்தீங்களா... சேட்டைக்கார பூனை எப்படி ஒளிந்து கொண்டு நம்மையெல்லாம் ஏமாற்றிருக்குன்னு....

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+