டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரூமேனியா வழியாக தாயகம் திரும்பும் இந்திய மாணவர்கள்.. 2 ஏர் இந்தியா சிறப்பு விமானங்கள் இயக்கம்

Google Oneindia Tamil News

டெல்லி: உக்ரைன் நாட்டில் சிக்கிய உள்ள மாணவர்களை மீட்க இன்று (பிப். 26) சிறப்பு விமானங்கள் இயக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில்,அ அந்நாட்டில் பெரும் பதற்றமான சூழல் உருவாகி உள்ளது. கடந்த 2 நாட்களாகவே உக்ரைன் மீது ரஷ்யா முழு வீச்சில் தனது ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கி உள்ளது.

Over 470 Indian Students Set To Leave Ukraine Via Romania Border

இந்தப் போர் காரணமாக உக்ரைன் நாட்டின் வான்வழி முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது. இதனிடையே அங்குச் சிக்கி உள்ள மாணவர்கள் உட்பட இந்தியர்களை வேறு வழிகளில் மீட்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு உள்ளது.

உக்ரைன் நாட்டை சுற்றி உள்ள அண்டை நாடுகளின் உதவியுடன் அங்குள்ள இந்திய மாணவர்கள் மீட்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, உக்ரைன் கல்லூரிகளில் படிக்கும் இந்திய மாணவர்கள் சாலை வழியாக ரூமேனியா நாட்டிற்கு வரத் தொடங்கி உள்ளனர்.

இவர்களுக்காகவே அப்பகுதிகளில் ரஷ்யா மொழி பேசும் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகளும் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இதனிடையே 470 இந்திய மாணவர்கள் தற்போது ரூமானியாவுக்கு பத்திரமாக வந்துள்ளதாகவும் இந்திய மாணவர்கள் தாயகம் அழைத்து வர இன்று (பிப்ய 26) இரண்டு ஏர் இந்தியா விமானங்கள் இயக்க உள்ளதாகவும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

இதற்காக ஒரு ஏர் இந்தியா விமானம் வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் டெல்லியில் இருந்தும், மற்றொன்று விமானம் இரவு 10.25 மணியளவில் மும்பையில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இவை இந்திய மாணவர்களை ஏற்றிக் கொண்டு சனிக்கிழமை ரூமானியா தலைவர் புக்கரெஸ்டில் இருந்து இந்தியா திரும்ப உள்ளது.

இந்தியா திரும்பும் மாணவர்களை மத்திய அமைச்சர்களில் ஒருவர் நேரில் சென்று வரவேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், அங்கிருக்கும் மாணவர்களை அழைத்து வரும் செலவுகளையும் மத்திய அரசே ஏற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

English summary
470 Indian students will be evacuated from Ukraine via Romania: Air India flight to operate two filghts to Romania to get back Indian students.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X