நாட்டின் எதிர்கால மருத்துவர்கள் தற்கொலை...நீட் தேர்வு ரத்து செய்க...டிஆர் பாலு மக்களவையில் பேச்சு!!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் நீட் தேர்வு நடத்துவதால் மாநிலக் கல்வியில் படிக்கும் மாணவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. நாட்டின் எதிர்கால மருத்துவர்கள் தற்கொலை செய்து வருகின்றனர் என்று மக்களவையில் இன்று திமுக எம்பி டி.ஆர். பாலு கூறினார்.

Recommended Video

    நீட் தேர்வு ரத்து குறித்து மக்களவையில் பேசிய திமுக எம்பிக்கள் - வீடியோ

    இன்று கூடிய மழைக்கால கூட்டத் தொடரில் நீட் தேர்வு குறித்து மக்களவையில் திமுக எம்பி டி.ஆர். பாலு பேசினார். அப்போது, ''சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் நீட் தேர்வு நடத்துகின்றனர். இதனால், மாநிலக் கல்வியில் படிக்கும் மாணவர்களுக்கு தேர்வை எதிர்கொள்வது சிரமமாக இருக்கிறது. இதுவரை 12 மாணவர்கள் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மாநிலக் கல்வித்திட்டத்தில் தேர்வு பெறும் நல்ல மதிப்பெண் பெற்ற பின்னரும் நீட் தேர்வு எழுதுகின்றனர்.

    Parliament Monsoon Session: DMK MP TR Balu says doctors of India have committed suicide

    மாணவர்கள் படிக்கும் பாடத்திட்டம் வேறாக இருக்கிறது. நீட் தேர்வில் கேட்கப்படும் பாடத்திட்டம் வேறாக இருக்கிறது. பிளஸ் 2 தேர்வு முடிந்த ஒரு மாத காலத்தில் நீட் தேர்வை எதிர்கொள்கின்றனர். இதனால் அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் திகைப்பு ஏற்படுகிறது. சிபிஎஸ்இ பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதனால் அச்சம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர். நாட்டின் எதிர்கால மருத்துவர்கள் தற்கொலை செய்து வருகின்றனர். எனவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்'' என்றார்.

    இதற்கு முன்னதாக அவை கூடுவதற்கு முன்பாக, இன்று நாடாளுமன்றத்துக்கு வெளியே திமுக எம்பிக்கள் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    டிஆர் பாலுவைத் தொடர்ந்து இன்று மக்களவையில் பேசிய திமுக எம்.பி கலாநிதி வீராசாமி, '' நீட் தேர்வு அச்சத்தால் தமிழக மாணவர்கள் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். சமூக ரீதியில் பின்தங்கிய மாணவர்கள் நீட் தேர்வால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். கொரோனாவுக்கு ஓமியோபதி, சித்தாவை பயன்படுத்துவது குறித்து ஆய்வுகள் தேவை'' என்றார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+