பேரறிவாளன் விடுதலை... 31 ஆண்டு கால தாயின் பாசப்போராட்டம் வென்றது
31 ஆண்டுகாலம் மகனைக்காக்க நீதிமன்ற படியேறி போராடிய தாயின் போராட்டம் வென்றுள்ளது.
டெல்லி: ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்று 31 ஆண்டு காலம் சிறையில் இருந்த பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 31 ஆண்டுகாலம் மகனைக்காக்க நீதிமன்ற படியேறி போராடிய தாயின் போராட்டம் வென்றுள்ளது. சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளனர் நீதிபதிகள்.
Recommended Video
எமனிடம் இருந்து கணவன் சத்யவான் உயிரை மீட்டார் சாவித்திரி என்று புராண கதைகளில் படித்திருப்போம். கடந்த 31 ஆண்டுகாலமாக சிறைவாசம் அனுபவித்து வந்த மகனை போராடி மீட்டிருக்கிறார் அற்புதம்அம்மாள்.
களைத்துபோன முகம், கால்களில் ரப்பர் செருப்பு, கண்ணாடி, வெள்ளை முடி, தோளில் ஒரு பை, இதுதான் அற்புதம்மாள் குறித்த அடையாளமாக இருக்கும். தனது மகனின் உயிரைக்காக்கவும், சிறையில் இருந்து விடுவிக்கவும் அவர் பயணித்த பாதைகள் கல்லும் முள்ளும் நிறைந்தது.

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைது
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தன் மகன் கைது செய்யப்பட்டான் என்ற செய்தி கேட்டு 32 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதோ, முதல்முறையாக தன் மகனுக்கு விடுதலை கிடைத்து விட்டது என்ற தீர்ப்பை கேட்டு மகிழ்ச்சியில் இருக்கிறார். அற்புதம்மாள். மகனை நிரபராதி என்று நீதிமன்றம் சொன்னதால் அவரது 32 ஆண்டுகால போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

சிறை தண்டனை
கணவர் குயில்தாசனுடன் அன்பு, அறிவு, அருள் என மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்தார் அற்புதம்மாள். சென்னை பெரியார் திடலில் தங்கி, பட்டயப்படிப்பு படித்துவந்தார் பேரறிவாளன். அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டதும், பேரறிவாளனை சிபிஐ விசாரணைக்கு அழைத்தது. விசாரணைக்குப் பிறகு பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டார் பேரறிவாளன்.

தாயின் போராட்டம்
பேரறிவாளன் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பிறகு, தன் வாழ்க்கையே மாறியதாக குறிப்பிட்டுள்ளார் அற்புதம் அம்மாள். சிறையில் அடைக்கப்பட்டிருந்த மகனைப் பார்க்க வேண்டும் என்றால், ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்குவந்து, சிபிஐ அதிகாரிகளிடம் அனுமதி வாங்கி, மீண்டும் பூந்தமல்லி சென்று அங்கு காத்திருந்து பார்க்க வேண்டும். பல நாட்கள் பேரறிவாளனைப் பார்க்காமலேயே திரும்பியிருக்கிறார் அற்புதம்மாள்.

நீதிமன்ற படியேறிய அற்புதம்மாள்
அதன்பிறகு தொடங்கியது அற்புதம்மாளின் நீதிப் போராட்டம். அவர் ஏறாத நீதிமன்றம் இல்லை, போகாத ஊரே இல்லை. அந்த அளவுக்கு சட்டத்தை நம்பி தன்னுடைய போராட்டத்தை தொடர்ந்தார் அற்புதம்மாள்.
பேரறிவாளனுக்கான பாசப்போராட்டத்தில், முதல் வெற்றி பெற்ற இடம் முன்னாள் சிபிஐ அதிகாரி தியாகராஜனின் மனமாற்றம் தான். ஒரு தாயின் போராட்டம் என்ன செய்யும் என்றால், குற்ற உணர்ச்சியில் இருந்த அதிகாரியின் மனசாட்சியை தட்டி எழுப்பி, உண்மையை வெளிக்கொண்டுவரும். அற்புதம்மாளின் போராட்டம் அதைத்தான் செய்தது.

சிபிஐ அதிகாரி வாக்குமூலம்
பேரறிவாளனிடம் நடத்திய விசாரணையில், 'எனக்கு எதுவும் தெரியாது' என பேரறிவாளன் கூறியதை வாக்குமூலத்தில் தவிர்த்ததை சிபிஐ அதிகாரி தியாகராஜனே ஒத்துக்கொண்டார். கடமையில் இருந்து வழுக்கி இருக்கிறேன், இது என் தவறுதான் என தியாகராஜன் வாக்குமூலம் தந்தார்.

தூக்கு தண்டனை ரத்து
ராஜிவ் காந்தி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மகன் பேரறிவாளனுக்காக, அமைச்சர்கள், தமிழக முதல்வர்களை சந்தித்தார் அற்புதம்மாள். கோரிக்கைவைத்தார். எப்படியாவது மகன் வீடு வர வேண்டும் என்ற போராட்டம் தொடர்ந்துகொண்டே இருந்தது. தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டது.

7 தமிழர் விடுதலை
அற்புதம் அம்மாளின் தொடர் போராட்டத்தால், பேரறிவாளன் உட்பட இந்த வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. இந்த வழக்கில் தமிழக ஆளுநர் முடிவெடுப்பார் என்று மத்திய அரசு தெரிவித்தது. தமிழக அரசு ஆளுநருக்கு மீண்டும் இதை பரிந்துரைத்தது. அதற்காக முதல்வரை நேரில் சந்தித்து நன்றி சொன்னார் அற்புதம்மாள்.

ஜாமீன் அளித்த நீதிமன்றம்
சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டதால், பேரறிவாளனுக்கு முதன்முறையாக பரோல் வழங்கப்பட்டது. அப்போது தனக்குப் பிடித்ததை, மகனுக்குப் பிடித்ததை ஆசை ஆசையாய் செய்து கொடுத்து பாசமாய் பார்த்துக்கொண்டார். 10ஆவது முறையாக பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிக்கப்பட்டது. தன்னை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் மார்ச் 9ஆம் தேதி அவருக்கு ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது.

பேரறிவாளன் விடுதலை
31 ஆண்டுகளுக்கு பிறகு பேரறிவாளனுக்கு ஜாமீன் கிடைத்தது. இன்றைய தினம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பாக பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். மகனின் விடுதலைக்காக 31 ஆண்டுகளாக போராடிய இந்தத் தாயின் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது. 31 ஆண்டுகாலம் தூக்கம் மறந்து போராடிய அற்புதம்மாள் இன்றைய இரவு நிம்மதியாக உறங்குவார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications