டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நம்ப முடியவில்லை.. 2200 பேருக்குத்தான் 1 கோடி வருமானம் வருதாம்.. எச்சரிக்கும் பிரதமர் மோடி

Google Oneindia Tamil News

டெல்லி: நம்ப முடியவில்லை.. ஆனால் உண்மை என்னான்னா.. 2200 பேர் தான் ஒரு கோடி வருமானம் இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள் என டைம்ஸ் நவ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று டைம்ஸ் நவ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது வரி சீர்திருத்தம், மற்றும் வருமான வரியை ஓழுங்காக பலர் கட்டாதது குறித்து கவலை தெரிவித்து பேசினார்.

அப்போது பிரதமர் மோடி பேசுகையில், "முந்தைய அரசுகள் வரி விதிப்பு முறையை தயங்கினாலும் இப்போதைய அரசு அந்த விஷயத்தில் குடிமக்களை மையமாக கொண்டு செயல்படுகிறது. நாட்டின் வளர்ச்சிக்காக மக்கள் தங்கள் வரிகளை செலுத்த வேண்டும்.

இது வெறும் சாம்பிள்தான்.. இனிமேல் தான் உண்மையான ஆக்ஷனே.. பிரதமர் மோடி அதிரடி இது வெறும் சாம்பிள்தான்.. இனிமேல் தான் உண்மையான ஆக்ஷனே.. பிரதமர் மோடி அதிரடி

கூடுதல் சுமை

கூடுதல் சுமை

நாட்டில் 1.5 கோடி மக்கள் மட்டுமே வருமான வரி கட்டுகிறார்கள். பலர் வழி செலுத்தாத போதும், அதை தவிர்ப்பதற்கான வழிகளை கண்டறியும் போது, நேர்மையாக வரி செலுத்துவோரின் தலையில் கூடுதல் சுமை விழுகிறது. எனவே தேசத்தின் சுதந்திரத்திற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களின் தியாகத்தை மனதில் வைத்து நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வரிகளை நேர்மையாக செலுத்துவதாக உறுதிமொழி எடுக்க வேண்டும்.

ஒரு கோடி வருமானம்

ஒரு கோடி வருமானம்

கடந்த ஆண்டு 1.5 கோடி கார்கள் விற்கப்பட்டது, 3 கோடிக்கும் அதிகமானோர் வணிகத்திற்காக அல்லது ஓய்வுக்காக வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளனர். நாடு முழுவதும் வக்கீல்கள், மருத்துவர்கள் மற்றும் ஆடிட்டர்கள் என பல தொழில் வல்லுநர்கள் உள்ளனர், ஆனால் 2,200 பேர் மட்டுமே ஆண்டு வருமானத்தை ரூ .1 கோடிக்கு மேல் உள்ளதாக அரசிடம் அறிவித்திருக்கிறார்கள். எனவே பலர் விரைவில் "உச்சநீதிமன்றத்தை சந்திப்பார்கள்".

கவலையாக உள்ளது

கவலையாக உள்ளது

மக்கள் விடுமுறைக்கு வெளிநாடுகளுக்குச் செல்வதையும், அவர்கள் விரும்பும் கார்களை வாங்குவதையும் பார்க்கும்போது எங்களுக்கு மகிழ்ச்சி. ஆனால் வரி செலுத்தும் எண்ணம் இல்லாததை காணும்போது, அது எனக்கு கவலை அளிக்கிறது. "இனி மோசமான விளையாட்டிற்கு இடமில்லை" . "வரி துன்புறுத்தல் என்பது கடந்த காலத்தின் ஒரு விஷயமாக இருக்கும், இப்போது இந்தியா தொழில்நுட்ப உதவியுடன் வரி ஊக்கத்தை நோக்கி நகர்ந்துள்ளது.

5 டிரில்லியன் பொருளாதாரம்

5 டிரில்லியன் பொருளாதாரம்

இந்தியாவில் வரி நிர்வாகம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. வரி செலுத்துவோர்களை அதிகம் கொண்ட ஒரு சில நாடுகளின் கிளப்பில் இந்தியா நுழைந்துள்ளது. இந்தியா இனி நேரத்தை வீணாக்காது, அது நம்பிக்கையுடன் முன்னேறும் .... மத்திய பட்ஜெட் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தின் இலக்கை அடைய உதவும்" என்று மோடி கூறினார்.

English summary
it was unbelievable but true that only 2,200 people in the country had declared earnings of Rs 1 crore per annum: pm modi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X