டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பசியால் ஜன்னலை கொத்திய மயில்.. ஆலோசனை கூட்டத்தையே பாதியில் நிறுத்திய மோடி.. நெகிழ்ந்த அமித் ஷா

Google Oneindia Tamil News

டெல்லி: பசியில் வாடிய மயிலை கண்டவுடன் முக்கிய கூட்டத்தையே பாதியில் நிறுத்திவிட்டு அதற்கு பிரதமர் மோடி உணவளிக்க சொன்னதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் அலுவலகத்தில் மயிலுக்கு உணவளிக்கும் வீடியோவும் புகைப்படமும் வெளியாகி சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டது.

இது லிஸ்ட்லயே இல்லையே.. மகன்,மருமகளிடம் ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு கேஸ் போட்ட பெற்றோர்- ஏன் தெரியுமா?இது லிஸ்ட்லயே இல்லையே.. மகன்,மருமகளிடம் ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு கேஸ் போட்ட பெற்றோர்- ஏன் தெரியுமா?

இந்த வீடியோவை பார்த்த மக்கள் ஒரு பக்கம் வரவேற்பு தெரிவித்து பகிர மறுபக்கம் கொரோனாவால் மக்கள் உயிரிழந்துகொண்டிருக்கும் நேரத்தில் இது தேவைதானா எனக் கேள்வி எழுப்பினர்.

 அமித்ஷா பேச்சு

அமித்ஷா பேச்சு

இந்த நிலையில், மோடி@20 - DREAMS MET DELIVERY என்ற புத்தகத்தை நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் வெளியிட்டார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி குறித்து இதுவரை பலரும் அறிந்திராத தகவலை அவர் பகிர்ந்துகொண்டார். முக்கியமான கூட்டம் ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசிக் கொண்டிருந்தபோது பசியில் வாடிய மயிலுக்காக பாதியிலேயே நிறுத்தியதாக தெரிவித்து உள்ளார்.

மயிலுக்கு உதவிய மோடி

மயிலுக்கு உதவிய மோடி


"பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார். அப்போது மயில் ஒன்று தனது அலகால் அவரது அலுவலக ஜன்னல் கண்ணாடியை கொத்திக்கொண்டு இருந்தது. சத்தம் கேட்டு ஜன்னலை பார்த்த மோடி மயில் பசியில் இருப்பதை அறிந்தார். உடனே கூட்டத்தை சிறிது நேரம் நிறுத்திவிட்டு தனது ஊழியரை அழைத்தார்.

இரக்கம் காட்டக்கூடியவர்

இரக்கம் காட்டக்கூடியவர்

அவரிடம் ஜன்னலில் பசியோடு நிற்கும் மயிலுக்கு உணவு வழங்குமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். ஒரு முக்கியமான கூட்டத்தில் ஆலோசனையில் மூழ்கி இருந்தபோது மயில் குறித்து சிந்திக்கும் அளவுக்கு பிரதமர் நரேந்திர மோடி அதிகம் இரக்கம் காட்டக்கூடியவர்." என்றார். விழாவில் பிரதமர் மோடியை புகழந்து தள்ளிய அமித்ஷா, அவரை சக்திவாய்ந்த தலைவர் எனக்கூறினார்.

குஜராத் முதலமைச்சர்

குஜராத் முதலமைச்சர்

"நரேந்திர மோடி முதன்முதலில் குஜராத் முதலமைச்சராக பதவியேற்றபோது அவருக்கு ஒரு பஞ்சாயத்தை நடத்திய அனுபவம் கூட கிடையாது. குறைவான அனுபவம் இருந்தபோதிலும், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குஜராத் மாநிலத்தை வளர்ச்சி மாநிலமாக கொண்டு சென்று மக்களின் மனதை கவர்ந்து அடுத்தடுத்த தேர்தல்களில் வென்றவர் நரேந்திர மோடி." என அமித்ஷா தெரிவித்தார்.

English summary
PM Modi stopped important meeting and ordered to feed hungry peacock: பசியில் வாடிய மயிலை கண்டவுடன் முக்கிய கூட்டத்தையே பாதியில் நிறுத்திவிட்டு அதற்கு பிரதமர் மோடி உணவளிக்க சொன்னதாக டெல்லியில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X