செஸ் ஒலிம்பியாட் 2022! நான் வர்றேன் சென்னைக்கு! ரொம்ப ஆர்வமாக இருக்கு! பிரதமர் மோடி போட்ட ட்வீட்!
டெல்லி : சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்கும் நிலையில் நாளை (28 ஆம் தேதி) மாலை 6 மணிக்கு நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவிற்காக சென்னைக்கு வர ஆவலுடன் காத்திருக்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சுமார் 187 நாடுகளைச் சேர்ந்த 1400க்கும் மேற்பட்ட வீரர்கள் போட்டியில் பங்கேற்க உள்ள நிலையில், தமிழக அரசு சார்பில் போட்டிக்கான ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தமிழகம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
போட்டி தொடக்க விழா நாளை (28 ஆம் தேதி) மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி போட்டியைத் தொடங்கி வைக்கிறார். இதற்காக நாளை பிற்பகல் 2.20 மணிக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, சென்னை விமான நிலையத்துக்கு மாலை 4.45 மணிக்கு வருகிறார்.

செஸ் ஒலிம்பியாட்
விமானநிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பிரதமரை வரவேற்கின்றனர். நிகழ்ச்சி முடிந்த பின்னர் இரவு 8 மணியளவில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் செல்கிறார். பிரதமர் வருகையையொட்டி சென்னையில் பலத்த பாதுக்காப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் இரு நாட்கள் சென்னையில் தங்கியிருக்கும் பிரதமர், சென்னையில் பட்டமளிப்பு விழாவிலும் கலந்து கொள்கிறார்.

44வது செஸ் ஒலிம்பியாட்
இந்நிலையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவிற்காக சென்னையில் இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்," நாளை, ஜூலை 28 மற்றும் நாளை மறுநாள் குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளேன்.

பிரதமர் நரேந்திர மோடி
குஜராத்தில் மதியம் சபர் பால் பண்ணையில் ரூ.1000 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறேன். பல ஆண்டுகளாக, குஜராத்தில் கூட்டுறவு மற்றும் பால் துறையை வலுப்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். சபார் பால் பண்ணையில், தூள் ஆலை மற்றும் அசெப்டிக் பால் பேக்கேஜிங் ஆலை திறக்கப்படும். சபார் சீஸ் மற்றும் மோர் உலர்த்தும் ஆலை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்படும்.

ஆவலுடன் காத்திருக்கிறேன்
நாளை மாலை 6 மணிக்கு நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவிற்காக சென்னைக்கு வர ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்தியாவிலேயே, அதுவும் செஸ்ஸுடன் பெருமைமிகு தொடர்பைக் கொண்டுள்ள தமிழ்நாட்டிலேயே இது ஒரு சிறப்பான போட்டியாகும்." என கூறியுள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications