குடியரசுத் தலைவர் நாளை கர்நாடகா பயணம் - மைசூர் தசரா திருவிழாவை தொடங்கி வைக்கிறார்!
டெல்லி: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, 3 நாட்கள் பயணமாக நாளை கர்நாடகா செல்கிறார். குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக அவர் கர்நாடக மாநிலத்திற்கு வருகை தரவுள்ளார். மைசூரில் புகழ்பெற்ற தசரா திருவிழாவை, நாளை தொடங்கி வைக்கிறார்.

கர்நாடகா மாநிலம் மைசூரில், உலகப் புகழ்பெற்ற தசரா திருவிழா, 10 நாட்களுக்கு வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். மைசூர் தசரா விழாவைக் காண்பதற்காக, பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள். இதனால் 10 நாட்களும், மைசூர் நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும்.
உலகப் புகழ்பெற்ற மைசூர் தசரா திருவிழா, கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக எளிமையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், தற்போது வழக்கமான உற்சாகத்துடன் வரும் திங்கட்கிழமை (நாளை) மைசூர் தசரா திருவிழா கோலாகலமாகத் தொடங்கி, அடுத்த மாதம் 5-ம் தேதி வரை, 10 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், தசரா திருவிழவையொட்டி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, 3 நாட்கள் பயணமாக நாளை கர்நாடக மாநிலத்திற்கு வருகை தரவுள்ளார். குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக அவர் கர்நாடக மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார்.
மைசூர் சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்து கொள்கிறார். பின்னர், இந்த ஆண்டுக்கான மைசூர் தசரா விழாவை, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தொடங்கி வைக்கிறார். பின்னர், அன்றைய தினம், ஹூபாலியில் ஹூப்ளி-தார்வாட் மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ள 'பவுர சன்மனா' என்ற விழாவிலும் குடியரசுத் தலைவர் கலந்துகொள்கிறார். தார்வாட்டில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகத்தின் புதிய வளாகத்தையும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைக்கிறார்.
வரும் 27-ம் தேதி, பெங்களுருவில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த கிரையோஜெனிக் என்ஜின்கள் உற்பத்தியையும் குடியரசுத் தலைவர் தொடங்கி வைக்கிறார். இதனைத் தொடர்ந்து, தென்மண்டல நச்சு நுண்மவியல் (வைராலஜி) நிறுவனத்திற்கு காணொலி மூலம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அடிக்கல் நாட்டுகிறார்.
பின்னர், செயின்ட் ஜோசப் பல்கலைக்கழகத்தின் தொடக்க விழாவிலும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்கிறார். மேலும், பெங்களுருவில் அவரைக் கவுரவித்து கர்நாடக அரசு சார்பில் வழங்கும் வரவேற்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார். 3 நாட்கள் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, வரும் 28-ம் தேதி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மீண்டும் தலைநகர் டெல்லிக்கு திரும்பவுள்ளார்.
-
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்!












Click it and Unblock the Notifications