டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பணியில் பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது- பிரதமர் மோடி பேச்சு

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டை கட்டியெழுப்பும் கடினமாக பாதையை பாஜக தேர்ந்தெடுத்து வேகமாக பயணித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Independence Day Speech | Prompter இல்லாமல் பேசிய பிரதமர் மோடி *Politics | Oneindia Tamil

    கோவா மாநிலத்தின் கிராமப்புற வீடுகளில் 100 சதவிகித குழாய் நீர் விநியோகத்தை குறிக்கும் வகையில் கோவா அரசு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் காணொளி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். பனாஜியில் நடைபெற்ற விழாவில் கோவா முதமைச்சர் பிரமோத் சாவந்த், மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதனைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், சுதந்திரத்திற்குப் பிறகு 70 ஆண்டுகளாக மூன்று கோடி கிராமப்புற வீடுகளுக்கு மட்டுமே குழாய் நீர் இணைப்பு இருந்தது. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில், பாஜக அரசு கூடுதலாக ஏழு கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு குழாய் நீர் இணைப்பு வழங்கியுள்ளது.

    டெல்லியில் நரேந்திர மோதி - மு.க. ஸ்டாலின் சந்திப்பில் நடந்தது என்ன?டெல்லியில் நரேந்திர மோதி - மு.க. ஸ்டாலின் சந்திப்பில் நடந்தது என்ன?

     பிரதமர் மோடி பேச்சு

    பிரதமர் மோடி பேச்சு


    10 கோடி குடும்பங்களுக்கு குழாய் நீர் இணைப்பு என்ற மைல்கல்லை எட்டியுள்ளோம். நீர் வழங்கல் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் மத்திய அரசின் உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. ஜல் ஜீவன் திட்டத்தை அறிவித்தபோது, ​​16 கோடி கிராமப்புற குடும்பங்கள் வேறு நீர் ஆதாரங்களை நம்பியிருந்தனர். இவ்வளவு பெரிய மக்கள் தொகை போராடுவதை எங்களால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை.

    பாஜகவின் திட்டம்

    பாஜகவின் திட்டம்

    அதனால் இந்த திட்டத்திற்காக ரூ.3.60 லட்சம் கோடி செலவிடப்பட்டு வருகிறது. 100 வருடங்களில் இல்லாத மிகப்பெரிய தொற்றுநோயால் குறுக்கீடுகள் ஏற்பட்டாலும், திட்டத்தின் வேகம் குறையவில்லை. ஒரு அரசை நிறுவுவதற்கு கடின உழைப்பு தேவையில்லை. ஆனால் ஒரு நாட்டை கட்டியெழுப்ப நிச்சயம் கடின உழைப்பு தேவை. பாஜக அரசு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளது. எனவே நிகழ்கால மற்றும் எதிர்கால சவால்களை கருத்தில் கொண்டு பணியாற்றி வருகிறோம்.

    எதிர்க்கட்சிகள் மீது விமர்சனம்

    எதிர்க்கட்சிகள் மீது விமர்சனம்

    தேசத்தின் நீர் பாதுகாப்பு குறித்து தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட வேண்டும். நாட்டைப் பற்றி கவலைப்படாதவர்கள், நாட்டின் நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை கெடுப்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை. அவர்கள் மிகப்பெரிய விஷயங்கள் பற்றி பேச முடியும். ஆனால் தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளுக்கு தொலைநோக்குடன் முடிவை எட்ட முடியாது.

     ஜல் ஜீவம் திட்டம்

    ஜல் ஜீவம் திட்டம்

    ஜல் ஜீவன் திட்டத்தின் வெற்றிக்கு மக்களின் பங்களிப்பு, பங்குதாரர்களின் ஆர்வம், அரசியல் விருப்பம் மற்றும் வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்தியது ஆகியவையே காரணம் என்று தெரிவித்தார்.

    English summary
    prime Minister Narendra Modi today called for a long-term approach for nation-building. He said, Those who aren't bothered about India only talk big but can't work with big vision.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X