மோடிக்கு எதிராக சர்வதேச சதி.. பின்னணியில் காலிஸ்தான்.. சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு குற்றச்சாட்டு
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் பஞ்சாப் மாநிலத்தில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று சுமார் 42,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க இருந்தார். மோசமான வானிலை காரணமாக பிரதமர் ஹெலிகாப்டரில் செல்லாமல் சாலை மார்க்கமாக சென்றார்.
பதிண்டா என்ற இடத்தில் சென்றபோது விவசாயிகள் அந்த பகுதியில் மறியலில் ஈடுபட்டதால் பிரதமர் வாகனம் மேற்கொண்டு செல்ல முடியவில்லை. இதனால பதிண்டா பகுதி மேம்பாலத்தில் பிரதமர் மோடியின் காண்வாய் சுமார் 20 நிமிடங்கள் வரை நின்றது.

பிரதமருக்கு பாதுகாப்பு குளறுபடி
இந்த பாதுகாப்பு குளறுபடி காரணமாக பிரதமர் மோடி தான் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்தார். பிரதமர் சாலை வழியாக பயணிக்கும்போது பஞ்சாப் அரசு கூடுதல் பாதுகாப்பை ஏற்படுத்த தவறி விட்டது என்று குற்றம்சாட்டிய மத்திய உள்துறை அமைச்சகம் இது தொடர்பாக பஞ்சாப் அரசு விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

அமித்ஷா கண்டனம்
உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலர் பிரதமரின் பாதுகாப்பு குறைபாட்டுக்கு பஞ்சாப் அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி '' பிரதமர் மோடி விமானம் மூலம் வருவதாக முதலில் திட்டமிட்டிருந்தார், ஆனால் எங்களுக்கு தெரிவிக்காமல் சாலை வழியாக வந்தார். ஆனாலும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன என்றார்.

பஞ்சாப் அரசு வாதம்
இந்த நிலையில் பஞ்சாப் பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை உச்சநீதிமன்றம் இன்று அவசர வழக்காக விசாரித்து வருகிறது. அப்போது பஞ்சாப் அரசு சார்பில், '' இந்த வழக்கை நாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. நாங்கள் ஒரு குழுவை அமைத்துள்ளோம். மத்திய அரசு கூட ஒரு குழுவை அமைத்துள்ளது. நாங்கள் திறந்துள்ளோம். இந்த விவகாரத்தை விசாரிக்க யாரை வேண்டுமானாலும் நியமிக்கலாம்.

'எங்களுடைய பிரதமர் மோடி'
எங்கள் முதல்வர் பிரதமரே எங்களுடைய பிரதமர் என்றும் கூறியிருக்கிறார். பாதுகாப்பு மீறல் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம். நீதிமன்றம் என்ன நினைக்கிறதோ அதைச் செய்யலாம்." என்றும் பஞ்சாப் அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியது. இதனை தொடர்ந்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வாதாடியது.

சர்வதேச அளவில் நமக்கு அவமானம்
மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் வாதாடுகையில். '' பிரதமர் மோடியின் பாதுகாப்பு மீறல் விவகாரத்தில் என்ஐஏ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இந்த விவகாரம் அரிதிலும் அரிதானது. இது சர்வதேச அளவில் நமக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரதமரின் பாதுகாப்புக்கும், உயிருக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினார்.

காலிஸ்தானி பயங்கரவாத வீடியோ
''பிரதமரின் குதிரைப்படை சாலையில் பயணிக்கும் போதெல்லாம், பிரதமர் பயணிக்க முடியுமா என்று பார்க்க மாநில டிஜி சாலையை ஆய்வு செய்வார். இங்கும் மாநில டிஜி கிரீன் சிக்னல் கொடுத்தார்'' என்று மத்திய அரசு சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இதன்பிறகு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா காலிஸ்தானி பயங்கரவாத வீடியோ குறித்து தனது வாதத்தின்போது குறிப்பிட்டார்.
Recommended Video

சர்வதேச சதி உள்ளது
இந்த விவகாரத்தில் சர்வதேச பயங்கரவாத அமைப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என்று கடுமையாக வாதிட்ட அவர் பஞ்சாப்பில் தடை செய்யப்பட்ட நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பு பிரதமருக்கு எதிராக சதி செய்ய அழைப்பு விடுத்திருந்தது என்று பரபரப்பு குற்றம்சாட்டினார். இந்த வாதங்களை கேட்ட உச்சநீதிமன்றம் பிரதமர் மோடியின் பயணம் குறித்த ஆதாரங்கள் மற்றும் பதிவுகளை பாதுகாக்க பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றப் பதிவாளர் ஜெனரலுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications