தேசியக் கொடியை ஏந்தி போராட்டம்.. அபிஜித் தீப்கேவை கண்டிப்பா கைது பண்ணுவோம்! டெல்லி போலீஸ் கறார்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய கோரி 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) சார்பில் டெல்லியில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தை முன்னின்று நடத்தி CJP நிர்வாகிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். எனவே மீண்டும் ஒரு போராட்டத்திற்கு CJP அழைப்பு விடுத்திருக்கிறது. இந்த முறை போராட்டம் நடத்தினால் நிச்சம் அபிஜித் தீப்கேவை கைது செய்வோம் என்று டெல்லி போலீஸ் உறுதியாக கூறியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.

கடந்த அக்டோபர் 10ம் தேதி, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் அமைதியான முறையில் போராடிய CJP நிர்வாகிகள் மற்றும் எதிர்க்கட்சியினரை டெல்லி காவல்துறை கைது செய்தது.

Abhijit Dipke

இந்த கைது நடவடிக்கையை கண்டித்தும், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளுக்கு எதிராகவும், அக்டோபர் 16ஆம் தேதி.. அதாவது நாளை டெல்லி கன்னாட் பிளேஸில் தேசியக்கொடியை ஏந்தி மாபெரும் பேரணி நடத்தப் போவதாக காக்ரோச் ஜனதா கட்சி தலைவர் அபிஜித் அறிவித்திருக்கிறார்.

இந்த பேரணியை தொடர்ந்து, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை முற்றுகையிட போவதாகவும் போராட்டக்காரர்கள் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. 18 வது பிரிக்ஸ் சர்வதேச மாநாடு மற்றும் மிக முக்கிய பிரமுகர்களின் வருகை காரணமாக டெல்லியில் சட்டம் ஒழுங்கு ஏற்கனவே பதட்டமாக இருக்கும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டெல்லி கன்னாட் பிளேஸ் மற்றும் புது டெல்லி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பிஎன்எஸ்எஸ் பிரிவு 136-ன் கீழ் தடை உத்தரவு அமலில் உள்ளதால், இந்த பேரணிக்கு டெல்லி காவல்துறை அதிகாரப்பூர்வமாக அனுமதி மறுத்திருப்பதாக தெரிவித்திருக்கிறது.

தடையை மீறி போராட்டக்காரர்கள் திரண்டால், அபிஜித் தீப்கே உள்ளிட்ட பேரணியில் பங்கேற்பவர்கள் அனைவரும் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்றும், அவர்கள் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் டெல்லி காவல்துறை கடுமையாக எச்சரிக்கை கொடுத்திருக்கிறது.

கன்னாட் பிளேஸ், ஜந்தர் மந்தர் மற்றும் தலைமை தேர்தல் ஆணையரின் இல்லத்தை சுற்றி உள்ள பகுதிகளில், நூற்றுக்கணக்கான துணை ராணுவ படையினர் மற்றும் டெல்லி போலீசார் குவிக்கப்பட்டு இரும்பு தகடுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அசம்பாவிதங்களை தவிர்க்க போராட்டப் பகுதிகளில் மொபைல் இணைய சேவைகளை தற்காலிகமாக முடக்குவதற்கும் டெல்லி காவல்துறை திட்டமிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+