கேந்திரிய வித்யாலயாவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோட்டாவில் மாணவர் சேர்க்கைக்கு தடை - என்ன காரணம்?
டெல்லி: மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எம்.பிக்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் மத்திய அரசால் நடத்தப்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ராணுவ வீரர்கள், மத்திய அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் உள்ளிட்டவர்களின் குழந்தைகள் அதிகளவில் பயின்று வருகின்றனர். மாணவர் சேர்க்கையில் அவர்களுக்கே முன்னுரிமையும் அளிக்கப்பட்டு வருகிறது.
இதை தவிர்த்து சிறப்பு ஒதுக்கீடாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா 10 இடங்கள் வழங்கப்பட்டு வந்தன. அதன் மூலம் தங்கள் தொகுதிகளை சேர்ந்த 10 மாணவ மாணவிகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரை செய்து வந்தனர்.

பெற்றோர்களும் எம்.பிக்களிடம் பரிந்துரை கடிதத்தை பெற்று தங்கள் பிள்ளைகளை கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சேர்த்து வந்தனர். இதனை பயன்படுத்தி சில எம்.பிக்கள் பெற்றோரிடம் பணம் பெற்றுக்கொண்டு பரிந்துரை கடிதம் வழங்குவதாக குற்றச்சாட்டு இருந்து வந்தது.
இந்த நிலையில், எம்.பிக்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள தடை விதிப்பதாக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு மத்திய கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறது. 2022 - 2023 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் ஏப்ரல் 21 ஆம் தேதியுடன் நிறைவடைய இருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Recommended Video
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications