ராகுல் காந்திக்கு பொண்ணு பாருங்கப்பா.. “இப்படி” இருந்தால் ஓகேவாம்! இந்திரா பாதி.. சோனியா பாதி
டெல்லி: ஒற்றுமையை வலியுறுத்தி கன்னியாகுமரி தொடங்கி காஷ்மீர் நோக்கி ஒற்றுமை யாத்திரையில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்து இருக்கிறார். அதில் தன்னுடைய வாழ்க்கை துணையாக வருபவர் எப்படி இருக்க வேண்டும் என்ற தன்னுடைய விருப்பத்தை வெளிப்படையாக தெரிவித்து உள்ளார்.
டெல்லியில் ஒற்றுமை யாத்திரையில் ஈடுபட்டு இருக்கும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் அரசியல் கடந்து பல தனிப்பட்ட விசயங்கள் தொடர்பான சுவாரஸ்யமான பதில்களை அளித்தார்.
அவர் மோட்டார் பைக்குகள் தொடர்பாகவும், தனக்கு பிடித்த கார்கள் குறித்தும் பேசிய அவர், சீனாவை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன நிறுவனம் மலைகளில் ஏறும் எலெக்ட்ரிக் பைக்குகள் தயாரித்ததை பாராட்டினார்.

எலெட்க்ரிக் ஸ்கூட்டர்கள்
"நான் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஓட்டி இருக்கிறேன். ஆனால் எலெக்ட்ரிக் பைக்குகளை ஓட்டியது இல்லை. நீங்கள் இந்த சீன நிறுவனத்தை பார்த்து இருக்கிறீர்களா? அவை எலெக்ட்ரிக் மோட்டார்களுடன் கூடிய சைக்கிள் மற்றும் மலை பைக்குகள். மிகவும் அருமையான சிந்தனை. சிறப்பாகவும் உள்ளன." என்று தெரிவித்தார் ராகுல் காந்தி.

கார்கள் பிடிக்குமா?
தொடர்ந்து பேசிய அவர் தனக்கு சொந்தமாக கார் இல்லை என்றும், தான் சென்று வரும் ஹோண்டா CR-V கார் தன்னுடைய தாயுடையது எனவும் கூறினார். "எனக்கு கார்களின் மீது அதிக ஆர்வம் கிடையாது. மோட்டார் பைக்குகள் மீது எனக்கு அவ்வளவு ஆர்வம் இல்லை. ஆனால், மோட்டார் பைக்குகள் ஓட்டுவது எனக்கு பிடிக்கும். கார்களை பழுதுபார்க்க தெரியும், ஆனால், அதில் ஆர்வம் இல்லை. வேகமாக செல்வது காற்றில் செல்வது, நீரில் செல்வது, நிலத்தில் செல்வதற்கான ஐடியா எனக்கு பிடிக்கும்." என்றார்.

வாரிசு விமர்சனம்
வாரிசு என்று எதிர்க்கட்சிகள் எழுப்பும் குற்றச்சாடுகள் குறித்து பதிலளித்த ராகுல் காந்தி, "எனக்கு அதை பற்றி கவலை இல்லை. நீங்கள் அவ்வாறு சொல்ல நினைத்தாலும் அது பெரிய விசயம் இல்லை. நான் யாரையும் வெறுக்கவில்லை. நீங்கள் என்னை அவமதித்தாலும், ஏன் என்னை தாக்கினாலும் கூட நான் உங்களை வெறுக்க மாட்டேன்." என்றார்.

பப்பு பற்றி பேச்சு
பப்பு என்று தான் அழைக்கப்படுவது குறித்து பேசிய ராகுல் காந்தி, "அவரது வாழ்க்கையில் எதுவும் நடக்கவில்லை. அவரது வாழ்க்கையில் உறவுகள் சரியாக இல்லை என்பதாக் சோகமாக உள்ளார். அதன் காரணமாகவே மற்றவர்களை அவர் இழிவுபடுத்தி வருகிறார். பரவாயில்லை இருக்கட்டும். நான் அதை வரவேற்கிறேன். மேலும் இழிவுபடுத்தட்டும். நான் விரும்புகிறேன்.

இந்திரா காந்தி குறித்து நெகிழ்ச்சி
எனக்கு மேலும் பல பெயர்களை வைத்திடுங்கள். நான் நிதானமாகவே இருப்பேன்." என்றார். தொடர்ந்து பேசிய அவர் தன்னுடைய பாட்டியும், இந்தியாவின் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தியை தன்னுடைய இரண்டாவது தாய் என்று கூறிய ராகுல் காந்தி, தன்னுடைய வாழ்வில் அன்பிற்குரியவர் என அவர் குறித்து நெகிழ்ந்தார்.

எப்படிப்பட்ட மனைவி வேண்டும்?
அப்போது நெறியாளர் இந்திரா காந்தியை போன்ற ஒரு மனைவி வந்தால் திருமணம் செய்துகொள்வீர்களா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, "இது ஒரு சுவாரஸ்யமான கேள்வி.. நான் திருமணம் செய்துகொள்ளப்போகும் பெண்ணிற்கு இருக்க வேண்டிய தகுதிகள் பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால், என்னுடைய தாய் சோனியா காந்தி மற்றும் பாட்டி இந்திரா காந்தி ஆகியோரின் குணங்களின் கலவையாக இருந்தால் நல்லது." என்றார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications