"நாங்கள் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை.. பேரணியில் இணைந்த அனைவருக்கும் நன்றி” - ராகுல் காந்தி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உச்ச நீதிமன்றத்தை நோக்கி நடைபெற்ற போராட்டப் பேரணியில் பங்கேற்ற அனைவருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் கொலைகாரர்களுக்கு எதிராக ஒவ்வொரு தனிமனிதரும் உறுதியாக நிற்பார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

எஸ்ஐஆர் விவகாரம் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக அக்டோபர் 12 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் நோக்கி பேரணி நடத்தப்பட்டது.

Rahul Gandhi thanks supporters after Supreme Court march

டெல்லி அசோகா சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் நேற்று பிற்பகலில் ஒன்று கூடினர். அங்கிருந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) மூத்த தலைவர் சுப்ரியா சுலே உள்ளிட்டோர் பேருந்து, வாகனங்களில் பாராகம்பா சாலை பகுதிக்குச் சென்றனர்.

மத்திய டெல்லியின் பாராகம்பா சாலையில் இருந்து பிற்பகல் 4 மணிக்கு உச்ச நீதிமன்றம் நோக்கி பேரணி தொடங்கியது. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் தொண்டர்கள் புடைசூழ நடந்து சென்றனர். பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இந்தப் பேரணியில் பங்கேற்றனர். பேரணியின் இறுதியில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "இன்றைய இந்தப் போராட்டத்திற்காக வருகை தந்த ஒவ்வொருவருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இன்று மிக முக்கியமான நாள்.. ஏனெனில், இந்திய மக்கள் மிரட்டலுக்கு பணியமாட்டார்கள் என்பதை நாம் அரசுக்கு காட்ட வேண்டியிருந்தது. எங்களை அடிக்கவோ, அச்சுறுத்தவோ அல்லது பயமுறுத்தவோ உங்களால் முடியாது. அடக்குமுறையை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

முந்தைய நாள் இளைஞர்களை தாக்கிக் கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ் கோழைகள் எங்கே போனார்கள் என்று நான் யோசித்து கொண்டிருந்தேன். அந்த நபர்கள் எங்கே இருந்தார்கள்? ஏனென்றால் நான் இன்று அவர்களைப் பார்க்கவில்லை.

உங்கள் அந்த யூனிஃபார்மை அணிந்துகொண்டு வெளியே வந்து என்ன நடக்கிறது என்று ஏன் பார்க்கக்கூடாது? ஏனென்றால், அடிப்படையில் நீங்களும் இந்தியாவின் பிரதமரை போலவே அடக்குமுறையாளர்கள். உங்களால் நேருக்கு நேர் நிற்க முடியாது. அதிகாரத்தை பயன்படுத்தி மட்டுமே உங்களால் சண்டையிட முடியும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "செய்தியாளர் சந்திப்பில் நான் குறிப்பிட்டது போல, இது தனித்தனிப் போராட்டங்கள் அல்ல. இது ஒரே போராட்டம், இதில் அனைவரும் ஒன்றிணைந்து நிற்கிறோம். நமது அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் அழிப்பவர்களுக்கு எதிராக ஒவ்வொருவரும் உறுதியாக நிற்போம். நாங்கள் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை.

எங்களுக்கு ஆதரவளிக்க வருகை தந்த சிவில் சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். உங்கள் ஆதரவை நாங்கள் மதிக்கிறோம்; உங்கள் அனைவரையும் நாங்கள் நேசிக்கிறோம். இந்தியா, நமது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றின் விழுமியங்களைக் காக்க முன்வந்த உங்கள் அனைவருக்கும் நன்றி. வீதிகளில் இறங்கிப் போராடிய ஒவ்வொருவரையும் நினைத்து நான் பெருமிதம் கொள்கிறேன். நன்றி." என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மேலும், இன்று (அக்டோபர் 13) மாலை தேநீர் விருந்துக்கு அனைத்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் ராகுல் காந்தி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+