இந்திய வம்சாவளி தமிழருக்கு குடியுரிமை- 1987ஒப்பந்தத்தில் இல்லையா?மத்திய அரசுக்கு ரவிக்குமார் கண்டனம்
டெல்லி: இந்திய வம்சாவளி தமிழருக்கு இந்திய குடியுரிமை வழங்குவது தொடர்பாக ராஜீவ்- ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தில் எதுவும் சொல்லப்படவில்லை என்ற மத்திய அரசின் கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் லோக்சபா எம்.பி.ரவிக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

லோக்சபாவில் தாம் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய இணை அமைச்சர் அமைச்சர் மிஸ்ரா அளித்த பதில்களை மேற்கோள் காட்டி ரவிக்குமார் எம்.பி. தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

(எழுப்பப்பட்ட கேள்விகள்)
1. தமிழ்நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட முகாம்களில் அல்லலுறும் புலம் பெயர்ந்த ஈழத் தமிழ் அகதிகளுக்கு வழங்கப்படும் பணக் கொடையை உயர்த்தி வழங்கும் திட்டம் எதுவும் உள்ளதா ? அவ்வாறெனில் அதன் விவரங்களைத் தருக. இல்லை என்றால் அதற்கான காரணங்களை விளக்குக
2. அகதிகளுக்கென வீடுகளைக் கட்டித்தரும் திட்டம் அரசிடம் இருக்கிறதா?
3. இந்தியாவில் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அகதிகளுக்கு வழங்கப்படும் பணக் கொடை உள்ளிட்ட வசதிகளின் விவரங்களைத் தருக
4. அகதிகளின் குழந்தைகளுக்குத் தரமான கல்வியை வழங்குவதற்கான திட்டம் எதுவும் உள்ளதா?
5. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ராஜீவ்காந்தி- ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய வம்சாவளித் தமிழர்கள் எத்தனை பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டது? அதன் விவரங்களைத் தருக"
என்ற கேள்விகளை நாடாளுமன்றத்தில் இன்று எழுப்பி இருந்தேன். அதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்திருக்கும் உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா பின்வருமாறு தெரிவித்துள்ளார்:
1. இலங்கையிலிருந்து வந்துள்ள தமிழ் அகதிகளுக்கு வழங்கப்படும் பணக் கொடை அவ்வப்போது உயர்த்தி வழங்கப்படுகிறது.
2. தமிழ்நாடுஅரசு அகதிகளுக்கென 7469 வீடுகளைக் கட்டித் தருவது என்று முடிவு செய்துள்ளது.
3. பல்வேறு நாடுகளில் இருந்தும் இங்கு தஞ்சம் புகுந்துள்ள அகதிகளுக்கான வசதிகள் அந்தந்தப் பிரிவைச்சேர்ந்தவர்களுடைய தேவை, அவர்கள் வசிக்கும் இடம் ஆகியவற்றைப் பொறுத்து முடிவு செய்யப்படுகிறது. எனவே பணக் கொடை உள்ளிட்ட வசதிகளை ஒன்றோடொன்று ஒப்பிட முடியாது.
4. தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் அகதிக் குழந்தைகளுக்கு இலவசமாகக் கல்வி வழங்கப்படுகிறது.
5. 1987 ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் கையெழுத்தான ராஜீவ் காந்தி- ஜெயவர்த்தனே ஒப்பந்ததில் குடியுரிமை தொடர்பாக எதுவும் சொல்லப்படவில்லை"
இவ்வாறு அமைச்சர் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வசிக்கும் இந்தியாவைச் சேர்ந்தவர்களை இந்தியாவில் மறுகுடியமர்த்தம் செய்வது குறித்து ராஜீவ் காந்தி ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தின் பிரிவு 2.16 ( d) அதைப் பற்றி பின்வருமாறு விளக்குகிறது.

" The Government of India will expedite repatriation from Sri Lanka of Indian citizens to India who are resident here, concurrently with the repatriation of Sri Lankan refugees from Tamil Nadu."
" தமிழ்நாட்டிலிருக்கும் இலங்கை அகதிகளைத் திருப்பி அனுப்புவதுடன், இலங்கையில் வசிக்கும் இந்தியக் குடிமக்களை இலங்கையிலிருந்து இந்தியாவுக்குத் திருப்பி அழைத்துக்கொள்வதை இந்திய அரசு துரிதப்படுத்தும்." என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மை இப்படி இருக்கும் போது அப்படியான அம்சம் எதுவும் ஒப்பந்தத்தில் இல்லை என்று உள்துறை இணை அமைச்சர் சொல்லியிருப்பது அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. இவ்வாறு ரவிக்குமார் எம்.பி. பதிவிட்டுள்ளார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications