குடியரசு தினவிழா:தமிழக 3 போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம்..21 பேருக்கு காவல் பதக்கம்! லிஸ்ட்
குடியரசு தினவிழாவையொட்டி இந்தியாவில் 901 பேருக்கு காவல் பதக்கங்கள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் 3 பேருக்கு ஜனாதிபதி காவல் பதக்கமும், 21 பேருக்கு காவல் பதக்கமும் வழங்கப்பட உள்ளது
டெல்லி: ஆண்டுதோறும் குடியரசு தினவிழாவையொட்டி ஜனாதிபதி சார்பில் காவல் பதக்கங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இந்த ஆண்டு மொத்தம் 901 பேருக்கு காவல் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மெச்சத்தகுந்த வகையில் பணியாற்றியதாக தமிழ்நாட்டை சேர்ந்த சென்னை ஐஜி தேன்மொழி, செங்கல்பட்டு ஏஎஸ்பி பொன் ராமு, அரியலூர் ஏஎஸ்பி ரவிசேகரன் ஆகியோருக்கு ஜனாதிபதி காவல் பதக்கங்கள் வழங்கப்படுகிறது. இதுதவிர தமிழ்நாட்டை சேர்ந்த 21 காவலர்களுக்கு சிறந்த சேவைக்கான காவல் பதக்கங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரிகள் யார் யார்? எங்கு பணியாற்றி வருகின்றனர் என்பது பற்றிய முழுவிபரம் வெளியாகி உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினவிழாவையொட்டி இந்தியா முழுவதும் சிறப்பாக பணியாற்றும் நபர்களின் சேவைகளை பாராட்டி ஜனாதிபதி சார்பில் காவல் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
மத்திய உள்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆயுதப்படை பிரிவுகளில் பணியாற்றி வரும் வீரர்கள், மாநில காவல் துறைகளில் பணியாற்றும் அதிகாரிகளின் சேவைகளை பாராட்டி ஆண்டுதோறும் ஜனாதிபதி சார்பில் காவல் பதக்கங்கள் வழங்கப்படும்.

901 பேருக்கு பதக்கங்கள்
அந்த வகையில், இந்த ஆண்டு ஜனாதிபதியின் காவல் பதக்கங்கள் பெறும் அதிகாரிகளின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 901 காவலர்களுக்கு ஜனாதிபதியின் காவல்துறை பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. இதில் வீரதீர செயலுக்கான பதக்கம் 140 பேருக்கும், மெச்சத்தகுந்த வகையில் பணியாற்றிய வகையில் 93 பேருக்கும், சிறப்பாக செயல்பட்டதாக 668 பேருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளது.

3 பேருக்கு ஜனாதிபதி காவல் பதக்கம்
இதில் மெச்சத்தகுந்த வகையில் பணியாற்றியதாக தமிழ்நாட்டின் சென்னை ஐஜி தேன்மொழி, செங்கல்பட்டு ஏஎஸ்பி பொன் ராமு, அரியலூர் ஏஎஸ்பி ரவிசேகரன் ஆகியோருக்கு ஜனாதிபதி காவல் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் பட்டியல் வெளியிட்டுள்ளது.

சென்னை மதுரை ஐஜிக்களுக்கு பதக்கம்
அதேபோல் சிறப்பாக செயல்பட்ட வகையில் தமிழ்நாட்டை சேர்ந்த 21 பேருக்கு காவல் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளது. இந்த பதக்கத்தை சென்னை ஐஜி செந்தில் வேலன், திருநெல்வேலி போலீஸ் கமிஷனர் அவினாஷ் குமார், மதுரை ஐஜி அஸ்ரா கார்க், சென்னை சிஐடி பாதுகாப்பு பிரிவு II எஸ்பி சாமிநாதன், சென்னை மாநகர வடக்கு மண்ட டிசிபி மணிவண்ணன், சென்னை சென்ட்ரல் ரேஞ்ச் எஸ்பி முத்தரசு, சென்னை பாதுகாப்பு பிரிவு டிசிபி சங்கரண், கோவை மாநகர ஆயுதப்படை டிசிபி முரளிதரன், தாம்பரம் ஆயுதப்படை டிசிபி சந்திரன் ஆகியோருக்கு காவல் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளது.

ஏஎஸ்பி, டிஎஸ்பிக்களுக்கு பதக்கம்
மேலும், கிருஷ்ணகிரி ஏஎஸ்பி விவேகானந்தன், சென்னை க்யூ பிராஞ்ச் சிஐடி ஏஎஸ்பி சரவணன், சென்னை டிசிபி சிவராஜன், தாம்பரம் சர்வீஸ் பயிற்சி மையம் உதவி கமிஷனர் வெங்கடேசன், சென்னை செம்பியம் உதவி கமிஷன் செம்பேடு பாபு, கோவை சிஐடி டிஎஸ்பி ராமகிருஷ்ணன், சென்னை சைபர் கிரைம் பிரிவு டிஎஸ்பி அன்பரசன், சென்னை தெற்கு மண்டல இன்ஸ்பெக்டர் முரளி, நாகப்பட்டினம் சிஐடி க்ரைம் பிராஞ்ச் எஸ்ஐ அன்புராஜ், சென்னை சிஐடி சிறப்பு பிரிவு எஸ்ஐ ராதா, சென்னை சிஐடி சிறப்பு பிரிவு எஸ்ஐ சுப்புராஜ், கோவை சீரியஸ் க்ரைம் ஸ்குவாட் எஸ்ஐ சதையப்பன் ஆகியோருக்கு சிறப்பாக பணியாற்றிதற்கான காவல் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளது.
-
தமிழகத்தில் ஒவ்வொருவரின் மீது ரூ.1.28 லட்சம் கடன் இருக்கு.. அரசு சொன்னதுமே காசோலையில் செலுத்திய வழக்கறிஞர் -
உதயமாகும் "தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.." தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம்! -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
கேள்வி கேட்டா கரண்ட் வருமா? வாய் விட்ட மகேந்திரன்! வறுத்தெடுத்த நெட்டிசன்கள்! இப்போ மன்னிப்பு வீடியோ -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
பெண்கள் வாழ தகுதியற்ற தமிழ்நாடு..? நாங்க என்ன தப்பு செய்தோம்..? அறந்தாங்கி நிஷா ஆதங்கம் -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
60 வருடங்களில் தமிழகம் வாங்கிய கடனை விட திமுக அரசு 5 ஆண்டில் அதிக கடன் பெற்றுள்ளது - வெள்ளை அறிக்கை டேட்டா -
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன் -
தமிழ்நாட்டு தலைக்கு மேல் கத்தி.. ஏடாகூடமான எல் நினோ! கொஞ்சம் பிசகினாலும் போச்சு! பறந்த வார்னிங்! -
அடி வெளுக்கப்போகும் கனமழை! 7 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. உஷார் மக்களே! -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்!












Click it and Unblock the Notifications