கூகுளை பார்த்தெல்லாம் சந்தேகம் கேட்டால் ரூ.1000 பீஸ்.. இவரு ‘வேற வேற’ மாதிரி டாக்டர்!
கூகுளைப் பார்த்து சந்தேகம் கேட்பவர்களுக்கு ரூ. 1000 கட்டணம் என்ற மருத்துவரின் அறிவிப்பு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி: மருத்துவர் ஒருவர் தன்னிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், கூகுளைப் பார்த்து சந்தேகம் கேட்டால் அதற்கு ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவுறுத்தியுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
சமீபத்தில் அமெரிக்கப் பெண் ஒருவர், தனது சகோதரி அழுததற்கு மருத்துவமனையில் கட்டணம் வசூலித்ததாகக் கூறி பகிர்ந்திருந்த மருத்துவ கட்டண ரசீது ஒன்று இணையத்தில் பேசுபொருளானது. இதற்கெல்லாமா கட்டணம் வசூலிப்பார்கள் என ஆச்சர்யத்தை ஏற்படுத்திய அந்த ரசீது வைரலாகப் பகிரப்பட்டது.
தற்போதும் அதே போல் வித்தியாசமான மருத்துவக் கட்டணம் பற்றிய புகைப்படம் ஒன்று, இணையத்தை பரபரப்பாக்கியுள்ளது. கவுரவ் டால்மியா என்பவர் இந்தப் புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஹோட்டல் மெனு கார்டு மாதிரி அதில், தன்னிடம் வரும் வெளிநோயாளிகள் எது எதற்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என ஒரு மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்டண விபரம்
அந்தப் புகைப்படத்தில், 'நான் நோயை கண்டறிந்து, நான் சொல்லும் சிகிச்சை என்றால் ரூ.200 கட்டணம், நான் நோயை கண்டறிந்து, நீங்கள் சொல்லும் சிகிச்சை என்றால் ரூ.500 கட்டணம், உங்கள் கூகுள் சந்தேகங்களுக்கு ரூ.1000 கட்டணம், நீங்கள் நோயை கண்டறிந்து, நான் சொல்லும் சிகிச்சை என்றால் ரூ.1500 கட்டணம், நீங்கள் நோயை கண்டறிந்து, நீங்கள் சொல்லும் சிகிச்சை என்றால் ரூ.2000 கட்டணம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூகுள் சந்தேகம்
'பைத்தியத்திற்கு வைத்தியம் பார்க்கும் டாக்டர்' என விசு பட டயலாக் மாதிரி, நான், நீங்கள், சிகிச்சை என மாற்றி மாற்றி இதே வார்த்தைகள் திரும்பத் திரும்ப அந்தப் புகைப்படத்தில் இடம் பெற்றுள்ளன. இதைப் பார்த்தாலே மற்ற நோய்களுக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளி கூடவே, மனநிலை பாதிக்கப்பட்டு கூடுதல் சிகிச்சை எடுக்க வேண்டும் என்பது மாதிரி இருக்கிறது. ஆனால் இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாக முக்கியக் காரணம், அதில் உள்ள அந்த மூன்றாவது கட்டண விபரம் தான்.

ஆயிரம் ரூபாய் கட்டணம்
அதாவது, 'உங்கள் கூகுள் சந்தேகங்களுக்கு ரூ. 1000 கட்டணம்' என அந்த மருத்துவர் கூறியிருப்பதில் இருந்து, பாவம் ஏற்கனவே ரொம்பவும் பாதிக்கப்பட்டிருப்பார் போல நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். கூடவே, 'போற போக்கைப் பார்த்தால் எல்லா மருத்துவமனைகளிலும் இப்படி ஒரு கட்டண விபரம் நோட்டீஸாக ஒட்டப்பட்டிருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை' எனவும் தெரிவித்துள்ளனர்.

பாவம் அந்த டாக்டர்
எந்த நோயாக இருந்தாலும், உரிய மருத்துவரிடம் சென்று மருத்துவம் பார்த்துக் கொள்ளவேண்டும். அதை விட்டு விட்டு கூகுளில் தேடிப் பார்த்துவிட்டு, மருத்துவரிடம் சென்று தங்களின் சந்தேகத்தை எல்லாம் கேட்டால் இப்படித்தான் அதற்கும் ஒரு கட்டணத்தைக் கேட்பார்கள் என சம்பந்தப்பட்ட அந்த முகம் தெரியாத மருத்துவருக்காக பரிந்து கொண்டும் சிலர் கமெண்ட் வெளியிட்டு வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications