Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதேநாளில் இந்திரா பிறப்பித்த அவசரநிலை பிரகடனம்-இன்று பொங்கும் பா.ஜ.க.- அன்று ஆதரித்த ஆர்.எஸ்.எஸ்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 1975-ம் ஆண்டு இந்திய தேசம் முதல் முறையாக அவசரநிலை பிரகடனம் எனும் சர்வாதிகாரத்தை அனுபவித்தது.. அப்போதைய பிரதமராக இருந்த காங்கிரஸின் இந்திராகாந்தி தமது சுயநலனுக்காக இந்த ஒட்டுமொத்த தேசத்தையே ரணப்படுத்திய கொடுங்காலம் அது. இன்று அவசரநிலை பிரகடனத்தை செயல்படுத்தியதற்காக காங்கிரஸ் மீது பாய்ந்து பிராண்டுகிற பாஜக, அன்று ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் மன்னிப்பு கடிதங்கள் எழுதி கொடுத்து இந்திராவை ஆதரித்த வரலாற்றை வசதியாக மறந்துவிடுகிறது.

1971-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் இந்திரா காந்தி வெற்றி பெற்றதை எதிர்த்து ராஜ்நாராயண் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் 1975-ல் ஜூன் 12-ல் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புதான் வரலாற்றின் இருண்டபக்கங்களை இந்திரா காந்தி அம்மையார் உருவாக்க வித்திட்டது.

பிரதமர் பதவியில் இருந்த இந்திரா காந்தியின் தேர்தல் வெற்றி செல்லாது; 6 ஆண்டுகளுக்கு இந்திரா காந்தி தேர்தலில் போட்டியிட தடை.. இதுதான் அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பு. இதனையடுத்து இந்திரா காந்தி பிரதமர் பதவியில் விலக கோரி நாடு முழுவதும் மக்கள் கிளர்ச்சி வெடித்தது. இதை எதிர்கொள்ள முடியாமல்தான் அவசரநிலை பிரகடனத்தை வெளியிட்டார் இந்திரா காந்தி.

அவசர நிலை- திமுக ஆட்சி கலைப்பு

அவசர நிலை- திமுக ஆட்சி கலைப்பு

அவசரநிலை அமலுக்கு வந்த உடனேயே அரசு என்கிற அமைப்பு முறையின் இன்னொரு காட்டுமிராண்டித்தனமான முகம் பகிரங்கமாக அம்பலத்துக்கு வந்தது. ஒட்டுமொத்த எதிர்க்கட்சி தலைவர்களும் லட்சக்கணக்கில் சிறைக்குள் தள்ளப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டனர். இதில் பலர் மாண்டு போயினர். அவசரநிலை பிரகடனத்தை எதிர்த்த காரணத்தாலேயே தமிழகத்தில் அன்றைய முதல்வர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு கலைக்கப்பட்டது.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

46 ஆண்டுகளுக்கு முன்பு இப்படியான ஜனநாயகப் படுகொலையை இந்திரா காந்தி அம்மையார் அரங்கேற்றிய நாள்தான் இன்றைய ஜூன் 25. இந்த கறுப்பு தினங்களைத்தான் இன்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா என பலரும் நினைவுகூர்ந்து ஜனநாயகத்தின் மீதான அக்கறையை பெருக்கெடுத்து ஓடவிடுகின்றனர். ஆனால் இன்றைய இந்த வலதுசாரி தலைவர்கள் வசதியாக ஒன்றை மட்டும் மறைக்க முயற்சிக்கிறார்கள். ஆம் இன்றைய பா.ஜ.க.வின் தாய் அமைப்பான இன்றைய மத்திய பா.ஜ.க. அரசை வழிநடத்துகிற ஆர்.எஸ்.எஸ். இயக்கம் அன்று இந்திராவின் அவசரநிலை பிரகடனத்துக்கு அஞ்சி ஆதரித்தது; மன்னிப்பு கடிதம் கொடுத்தது என்பதுதான் அந்த வரலாறு.

அவசரநிலையும் ஆர்.எஸ்.எஸ். இயக்கமும்

அவசரநிலையும் ஆர்.எஸ்.எஸ். இயக்கமும்

இந்த மறைக்கப்பட்ட வரலாற்றை நாம் ஏதோ எடுத்தோம் கவிழ்த்தோம் என சொல்லவில்லை. இன்றும் ராஜ்யசபாவின் எம்.பி.யாக இருக்கிறாரே பா.ஜ.கவின் சுப்பிரமணியன் சுவாமி இதை 21 ஆண்டுகளுக்கு முன்னரே விவரித்து எழுதி இருக்கிறார். தி இந்து நாளேட்டிலும் பிரண்ட்லைன் இதழிலும் இந்திராவின் அவசர நிலை பிரகடனத்தின் போது ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் எப்படி எல்லாம் மக்களுக்கு துரோகிகளாக இருந்தனர் என்கிற வரலாற்றை பதிவு செய்திருக்கிறார் சு.சுவாமி.

மன்னிப்பு மேல் மன்னிப்பு கடிதங்கள்

மன்னிப்பு மேல் மன்னிப்பு கடிதங்கள்

"1975-77 ஆம் ஆண்டு காலத்தில் ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் பெரும்பாலான தலைவர்கள் அவசரநிலை பிரகடனத்துக்கு எதிரான போராட்டத்தை காட்டிக் கொடுத்த துரோகிகளாகத்தான் இருந்தார்கள். மகாராஷ்டிராவின் புனே எரவாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் தலைவர் பாலாசாகேப் தியோரஸ், இந்திரா காந்திக்கு எண்ணற்ற மன்னிப்பு கடிதங்களை அனுப்பியிருந்தார். அக்கடிதத்தில் ஜெய்பிரகாஷ் நாராயணுடன் ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் இணைந்து செயல்படாது; இந்திரா காந்தியின் 20 அம்ச திட்டத்தை ஆதரிக்கிறோம் எனவும் தியோரஸ் குறிப்பிட்டதாக சுப்பிரமணியன் சுவாமி பதிவு செய்திருக்கிறார்.

பரோலில் வாஜ்பாய்

பரோலில் வாஜ்பாய்

அவசரநிலை பிரகடனம் அமலில் இருந்த 20 மாதங்களில் மறைந்த முன்னாள் பிரதமரும் இன்றைய பாஜகவினரின் ஆதர்ச நாயகனுமாகிய வாஜ்பாய் பெரும்பாலான காலம் பரோலில்தான் இருந்தார். இந்திரா அரசுக்கு எதிரான எந்த ஒரு போராட்டத்திலும் வாஜ்பாய் பங்கேற்கவில்லை. இதற்கு காரணம் அவர் எழுதி கொடுத்த மன்னிப்பு கடிதம்தான் என்கிற வரலாற்றையும் சுப்பிரமணியன் சுவாமி பதிவு செய்துள்ளார். "இதற்கு ஆதாரமாக சுப்பிரமணியன் சுவாமி மேற்கோள்காட்டியது மகாராஷ்டிரா சட்டசபை குறிப்புகளைத்தான். ( சுப்பிரமணியன் சுவாமி எழுதியது: "It is on the record in the Maharashtra Assembly proceedings that the then RSS chief, Balasaheb Deoras, wrote several apology letters to Indira Gandhi from inside the Yerawada jail in Pune disassociating the RSS from the JP-led movement and offering to work for the infamous 20-point programme. Mr. Atal Behari Vajpayee also wrote apology letters to Indira Gandhi, and she had obliged him.") அதேநேரத்தில் மாதவராவ் முலே, தாதோபந்த் தென்காடி, மொரோபந்த் பிங்லே ஆகிய ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் மன்னிப்புக் கேட்கத் தயாராக இல்லை என திட்டவட்டமான நிலையில் இருந்தனர் என்றும் சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டுள்ளார்.

இந்திராவுக்கு ஆதரவு

இந்திராவுக்கு ஆதரவு

அதேபோல் முன்னாள் உளவுத்துறை தலைவர் டிவி ராஜேஸ்வர் 2015-ம் ஆண்டு அளித்த பேட்டியில், இந்திராவின் அவசரகாலத்தை மட்டும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஆதரிக்கவில்லை; இந்திராவின் மகன் மறைந்த சஞ்சய் காந்தியுடன் தொடர்புகளை ஏற்படுத்தி 20 அம்ச திட்டத்தை செயல்படுத்த தயாராகவும் இருந்தது என்றார்.

சிறையில் சாட்சி...

சிறையில் சாட்சி...

மகாராஷ்டிரா தொழிற்சங்கத் தலைவராக இருந்த பாபா ஆதவ் செக்யூலர் டெமாக்ரசி என்ற இதழில் மகாராஷ்டிராச்வின் முதல்வராக சவானையும் இந்திரா காந்தியையும் நேரில் சந்திக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைமை பெரும் முயற்சிகளை எடுத்தது. எரவாடா கைதிகளிடம் அப்போது அரசாங்கமே மன்னிப்புக் கடிதங்களை கொடுத்தது. அந்த கடிதங்களை கொத்து கொத்தாக வாங்கி ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் கையெழுத்திட்டுக் கொடுத்ததற்கு நானே சாட்சி என பதிவும் செய்திருக்கிறார். இதுதான் அவசரநிலை பிரகடனத்துக்காக இன்று கண்ணீர் சிந்தும் பா.ஜ.க.வின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். வரலாறு.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+