டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மூச்சுக்காற்றுக்கு ஏங்கும் 'தலைநகரம்'.. தேடலில் தமிழகம் 'டாப்'.. அதிர வைக்கும் 'கூகுள்' ரிப்போர்ட்

Google Oneindia Tamil News

டெல்லி: என்னத்த சொல்ல.. இந்தியாவில் கொரோனாவால் மக்கள் எந்தளவு திணறிக் கொண்டிருக்கின்றனர் என்பதை இந்த செய்தி உலகுக்கு வெட்டவெளிச்சமாக காட்டுகிறது.

Recommended Video

    ஆக்சிஜன் இல்லாமல் தவிக்கும் மருத்துவமனைகள் | India Oxygen shortage Explained

    கொரோனா இரண்டாம் அலை, இந்தியாவில் கட்டுக்கடங்காமல், கையை மீறி சென்றுக் கொண்டிருக்கிறது. இறப்பவர்களை கூட தகனம் செய்ய இடமில்லாத அளவுக்கு நமது நிலைமை மோசமாக உள்ளது.

    குறிப்பாக, ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக, கொரோனா நோயாளிகள் அல்லல்படுவது கொடுமையின் உச்சம். மூச்சு விட முடியாமல், பலரும் இறந்து வருகின்றனர்.

    ஆக்சிஜன் தட்டுப்பாடு.. முந்தைய பாதிப்புகளிலிருந்து பாடம் கற்காத மத்திய அரசு.. எஸ்.டி.பி.ஐ. சாடல்..!ஆக்சிஜன் தட்டுப்பாடு.. முந்தைய பாதிப்புகளிலிருந்து பாடம் கற்காத மத்திய அரசு.. எஸ்.டி.பி.ஐ. சாடல்..!

     ஏப்ரல் 17 வரை

    ஏப்ரல் 17 வரை

    இந்த நிலையில், கூகுள் மற்றும் மூன்றாம் தரப்பு சமூக ஊடக பகுப்பாய்வு தளங்கள் மூலம் சில தரவுகள் வெளியாகியுள்ளன. அதாவது, Remdesivir மருந்துகள், RT-PCR பரிசோதனை, ஆக்சிஜன் சிலிண்டர், மருத்துவமனை படுக்கைகள் உள்ளிட்ட சில முக்கியமான 'Terms' குறித்து மக்கள் தேடிய டேட்டாக்களை இவை வெளியிட்டுள்ளன. இதில், கடந்த ஏப்ரல் 17ம் தேதி வரை, கொரோனா தொடர்பான தேடுதலில், "remdesivir near me" என்பதை மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகமானோர் தேடியுள்ளனர்.

     தவிக்கும் தலைநகரம்

    தவிக்கும் தலைநகரம்

    தலைநகர் டெல்லி என்ன தேடியிருக்கிறது தெரியுமா?.. "oxygen cylinder near me" என்பதைத் தான். மூச்சுக்காற்றுக்காக இந்திய தலைநகரமே தவித்துக் கொண்டிருக்கிறது. அதேபோல், "covid rt pcr test near me" மற்றும் "covid hospital near me" போன்றவற்றையும் மக்கள் அதிகம் தேடியுள்ளனர். விதிவிலக்காக "covid vaccination centres near me" என்பதை, மார்ச் 7-13 வாரத்தில் அதிகம் தேடியுள்ளனர்.

     அதிரும் சோஷியல் மீடியாஸ்

    அதிரும் சோஷியல் மீடியாஸ்

    ஏப்ரல் 17 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், தமிழ்நாட்டில் இருந்து தான் அதிக 'Search Volume'... அதாவது அதிக தேடல் அளவு பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் புரியும்படி சொல்லனும்னா, நம்மூர்ல இருந்து தான் மாஞ்சி மாஞ்சி கூகுள்ல அதிகமா கொரோனா பற்றி தேடியிருக்காங்க. கூகுளில் அதிகமாக தேடுவது ஒருபக்கம் என்றால், செவி வழிச் செய்திகள், வாட்ஸ் அப் மெசேஜ்கள் என அப்படி இப்படி என்று மேலோட்டமாக கேட்ட பல தகவல்களை ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்ட்டாகிராம் போன்றவற்றில் மக்கள் அதிகம் போஸ்ட் செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (இதுக்கு ஆய்வே தேவையில்லையே!)

     இரட்டிப்பான போஸ்ட்

    இரட்டிப்பான போஸ்ட்

    எடுத்துக்காட்டாக, "remdesivir" என்ற வார்த்தையை, ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்ட்டா ஆகிய தளங்களில், ஏப்ரல் 7 வரை சராசரியாக ஒவ்வொரு மணி நேரமும் 200 க்கும் குறைவான போஸ்ட்களே மக்களால் பதிவிடப்பட்டன. இருப்பினும், ஏப்ரல் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் முறையே 1,026 மற்றும் 1,207 பதிவுகள் இந்த தளங்களில் சராசரியாக ஒவ்வொரு மணி நேரமும் பதிவு செய்யப்பட்டன. இதேபோல், ஏப்ரல் 1 முதல் 16 வரை, "ஆக்ஸிஜன்" என்ற சொல் கொண்ட பதிவுகள் சராசரியாக ஒரு நாளைக்கு 3,700 ஆக இருந்தன, மேலும் இது ஏப்ரல் 17 மற்றும் 18 தேதிகளில் சராசரியாக ஒரு நாளைக்கு 6,750 போஸ்ட்களாக இரட்டிப்பாகியது.

    விரைவில் இந்த கொரோனா கொடுமையிலிருந்து இவ்வுலகம் விடுபட வேண்டும் என்று வேண்டுவதைத் தவிர வேறு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

    English summary
    oxygen cylinder, Remdesivir high search in google - கொரோனா
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X