RTI, சபரிமலை முதல் ஹிஜாப் வழக்கு வரை! உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழங்கிய மாறுபட்ட தீர்ப்புகள் இவைதான்
டெல்லி: இந்திய உச்சநீதிமன்றம் பல வழக்குகளில் மிக முக்கியமான தீர்ப்புகளை வழங்கி இருக்கிறது. அந்த வகையில் தற்போது ஹிஜாப் வழக்கில் தீர்ப்பை இன்று வழங்கியிருக்கிறது.
ஆனால் வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகளில் இருவருமே மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
இது ஒன்றும் புதியதல்ல. இதற்கு முன்னரே பல வழக்குகளில் நீதிபதிகள் இவ்வாறு மாறுபட்ட தீர்ப்பினை வழங்கியுள்ளனர்.

ஹிஜாப்
கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என கர்நாடகாவில் பள்ளிகள் புதிய நிபந்தனையை விதித்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக மாணவர்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் நீதிமன்றத்தை நாடியிருந்தன. கர்நாடக உயர்நீதிமன்றம் இந்த வழக்கில், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்று உத்தரவிட்டது. இது இஸ்லாமிய மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதையடுத்து அவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனர்.

மாறுபட்ட தீர்ப்பு
இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா மற்றும் சுஷாந்து துலியா ஆகியோரின் அமர்வின் கீழ் நடைபெற்றது வந்தது. இவ்வாறு இருக்கையில் இன்று தீர்ப்பு வெளியானது. இதில், கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்வதாக நீதிபதி ஹேமந்த் குப்தா தீர்ப்பு வழங்கினார். ஆனால், கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பையே தள்ளுபடி செய்வதாக நீதிபதி சுஷாந்து துலியா தீர்ப்பு வழங்கியுள்ளார்.
அதாவது கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடையில்லை என்பது நீதிபதி சுஷாந்து துலியா தீர்ப்பின் சாராம்சமாகும். விசாரித்தது இரண்டு நீதிபதிகள். ஆனால் தீர்ப்பும் வெவ்வேறு. இது போல ஏற்கெனவே பல்வேறு வழக்குகளில் உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் வேறுபட்ட தீர்ப்பினை வழங்கியுள்ளனர்.

ஆர்டிஐ
இந்தியாவில் உள்ள மிக முக்கிய அம்சங்களில் ஒன்று ஆர்டிஐ. சாமானியனுக்கு அதிகாரம் வழங்கும் சட்டமாக இது பார்க்கப்பட்டது. இவ்வாறு இருக்கையில் ஆர்டிஐ அதிகாரம் எதுவரை என்று கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தபோது, "தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நாட்டின் தலைமை நீதிபதியின் அலுவலகமும் வரும்" என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இதனையடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

மாறுபட்ட தீர்ப்பு
இந்த வழக்கை அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் விசாரித்தனர். இதில் கடந்த 2019 நவம்பரில் தீர்ப்பு வழங்கப்பட்டது. உயர்நீதிமன்ற தீர்ப்பை தலைமை நீதிபதி உள்ளிட்ட மூன்று நீதிபதிகளும் உறுதி செய்தனர். நீதித்துறையின் வெளிப்படைத்தன்மையை நிலை நிறுத்துவதற்காக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். ஆனால் மீதமுள்ள இரண்டு நீதிபதிகள் இதில் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.

சபரிமலை வழக்கு
அதேபோல சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது குறித்தும் மாறுபட்ட தீர்ப்பினை உச்சநீதிமன்றம் வழங்கியது. அதாவது சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் சென்று தரிசனம் செய்யலாம் என உச்சநீதிமன்றம் கடந்த 2018ல் தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து 65 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்களை விசாரித்து அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு கடந்த 2019ல் தீர்ப்பு வழங்கியது.

தீர்ப்பு
அதாவது இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், கான்வில்க்கர், இந்து மல்ஹோத்ரா, நாரிமன் மற்றும் சந்திரசூட் ஆகியோரில் முதல் மூன்று நீதிபதிகள் இந்த சீராய்வு மனுவை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினர். ஆனால் நீதிபதிகள் நாரிமன் மற்றும் சந்திரசூட் ஏற்கெனவே உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தனர். அதாவது அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்பதை இவர்கள் வரவேற்றனர்.

ஜெயலலிதா வழக்கு
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் மேல் முறையீடு வழக்கில் அப்போதைய அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்க கோரி, 2015ல் திமுக பொதுச்செயலாளராக இருந்த அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மதன் பி. லோகுர் மற்றும் ஆர். பானுமதி ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதனையடுத்து இந்த வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.

ஆதார் சட்டம்
நலத்திட்டங்களுக்கு ஆதார் அட்டை அவசியம் ஆக்கக்கூடாது எனவும், ஆதார் எண் இந்திய அரசியலமைப்புக்கு புறம்பானது என்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த 5 நீதிபதிகளில் 4 பேர் ஆதார் சட்டம் செல்லும் என்றும் நீதிபதி சந்திரசூட் மட்டும் மாற்று தீர்ப்பை வழங்கினார். அதாவது இதன் மூலம் மனிதர்களை கண்காணிக்க முடியும் என்றும், கடந்த 5 ஆண்டுகளில் ஆதார் அட்டை வைத்திருந்தவர்கள் எங்கு சென்றார்கள்? எவ்வளவு பணப்பரிவர்த்தனை மேற்கொண்டார்கள் என்பதையும் கண்காணிக்க முடியும் என்றும் அவர் கூறியிருந்தர்.
-
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம்












Click it and Unblock the Notifications