வியாபாரிகளை தாக்கும் சங்கீகள்.. மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் பிரதமர் மோடி.. ஓவைசி கடும் விமர்சனம்
டெல்லி: வங்கதேசத்தில் மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கு அனுமதி கோரப்பட்டுள்ள நிலையில், ‛‛மத உணர்வுகளுக்காக இந்தியாவில் மாடு விற்கும் முஸ்லிம் வியாபாரிகளை சங்கீகள் தாக்குவதோடு , மாநில அரசுகள் மாட்டிறைச்சியை தடை செய்கின்றன. ஆனால் ஏற்றுமதி மூலம் பணம் சம்பாதிப்பதில் பிரதமர் மோடிக்கு எந்த பிரச்சனையும் இல்லை'' என அசாதுதீன் ஓவைசி விமர்சனம் செய்துள்ளார்.
இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கொரோனா சமயத்தில் இந்த ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. தற்போது தொடர்ந்து மாட்டிறைச்சி ஏற்றுமதி நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் இருந்து மாட்டிறைச்சி இறக்குமதி செய்யும் நாடுகளில் அண்டை நாடான வங்கதேசமும் ஒன்று. இந்நிலையில் தான் சமீபத்தில் இந்தியாவில் இருந்து மாட்டிறைச்சி இறக்குமதி செய்வதை வங்கதேசம் நிறுத்தியது.

உள்நாட்டு இறைச்சிக்காக..
அதாவது உள்நாட்டு கால்நடை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், உள்நாட்டு மாட்டிறைச்சி விற்பனையை ஊக்கப்படுத்தும் நோக்கத்தில் இந்த முடிவை அந்நாட்டு அரசு எடுத்தது. அதோடு 2021-22 பட்ஜெட்டில் 20 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக வர்த்தக அமைச்சகம் சார்பில் கடந்த 2022 ஏப்ரலில் 2021-24 இறக்குமதி கொள்கைப்படி மாட்டிறைச்சி இறக்குமதி செய்ய கால்நடைத்துறையிடம் முன்அனுமதி பெற வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

இந்திய தூதரகம் கடிதம்
இந்நிலையில் தான் வங்கதேசத்தின் டாக்காவில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் அந்நாட்டின் மீன்வளம் மற்றும் கால்நடை அமைச்சகத்திற்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில், ‛‛மாட்டிறைச்சி இறக்குமதி தடையால் இந்திய ஏற்றுமதியாளர்கள் மற்றும் வங்கதேச இறக்குமதியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்திய மாட்டிறைச்சி மற்றும் செம்மறியாட்டு இறைச்சி ஏற்றுமதியாளர்கள் சங்கம், வங்கேதேச இறைச்சி இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் ஆகியவற்றின் சிக்கலை தீர்க்க பரிசீலிக்க வேண்டும்'' என கூறப்பட்டு உள்ளது.

ஓவைசி விமர்சனம்
இந்நிலையில் தான் இதனை ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும் எம்பியுமான அசாதுதீன் ஓவைசி விமர்சனம் செய்துள்ளார். இந்தியாவில் மாட்டிறைச்சி உணவுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்து கொண்டு வெளிநாடுகளில் ஏற்றுமதி செய்து சம்பாதிப்பதில் பிரதமர் மோடி குறியாக உள்ளதாக அவர் விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி அசாதுதீன் ஓவைசி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

மோடிக்கு பிரச்சனை இல்லை
இந்தியாவில் இருந்து மாட்டிறைச்சி இறக்குமதியை தொடங்க வங்கதேசத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கு மாடு விற்கும் முஸ்லிம் வியாபாரிகளை சங்கீகள் தாக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அதோடு மாநில அரசுகள் மாட்டிறைச்சியை தடை செய்வதோடு, இறைச்சி கூடங்களை மூடுகின்றன. ஆனால் பெரிய வியாபாரிகளுக்கு பணம் சம்பாதிக்க அரசு உதவுகிறது. மத உணர்வுகளுக்காக இங்கு இறைச்சி கடைகள் மூடப்பட்டாலும் கூட மாட்டிறைச்சி மூலம் பணம் சம்பாதிப்பதில் மோடிக்கு எந்த பிரச்சனையும் இல்லை'' என விமர்சனம் செய்துள்ளார்.
-
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
லஞ்ச் பாக்ஸில் மாட்டுக்கறி.. பள்ளிக்கு வந்த மாணவனையும் தாயையும் கைது செய்த போலீஸ்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications