டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோவிட் 19: 'உச்சநீதிமன்றம் தலையீடு தவறானது' - காங்கிரஸ் அடுக்கும் காரணங்கள்

Google Oneindia Tamil News

டெல்லி: கோவிட் 19 நிர்வாகத்தில் உச்சநீதிமன்றத்தின் தலையீடு தவறானது என காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா 2வது அலை பாடாய் படுத்தி எடுக்க, ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பலரும் இறக்கும் அவல நிலை நிலவுகிறது.

இந்த சூழ்நிலையில் ஆக்சிஜன், தடுப்பூசி பற்றாக்குறையால் மத்திய அரசு திணறி வரும் நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று உச்சநீதிமன்றமே இது தொடர்பாக தானே முன்வந்து விசாரணை நடத்தியது.

 "மனித உடல்கள்".. எந்த ஊர்னே தெரியல.. வரிசையாக அடுக்கி வச்சு.. பெட்ரோலை ஊற்றி.. எரியும் சடலங்கள்..!

 திறன் கிடையாது

திறன் கிடையாது

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அபிஷேக் மனு சிங்வி, இது தவறு, தவறு, தவறு. உச்சநீதிமன்றத்தில் இந்த செயல் உயர்நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிரானதாகும். இதுபோன்ற உள்ளூர் பிரச்சனைகளை சமாளிக்க உச்ச நீதிமன்றத்திற்கு போதுமான திறன் கிடையாது.

 மனச்சோர்வை ஏற்படுத்தும்

மனச்சோர்வை ஏற்படுத்தும்

இது தவறு.. ஏனெனில், இதுபோன்ற உத்தரவுகள் உயர்நீதிமன்றங்கள் உட்பட பிற அரசு சாரா நிறுவனங்களால் செய்யப்படும் சிறந்த பணிகளில் மனச்சோர்வை ஏற்படுத்தும். அவற்றை முடக்கி எதிர்மறையான விளைவைக் ஏற்படுத்தும். இது தவறு.. ஏனெனில் மத்திய அரசாங்கத்தின் கோவிட் எதிர்ப்பு கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் அனைத்தும் "முற்றிலும் தோல்வியை" தழுவிய நிலையில், அதனை நியாயப்படுத்துவதன் விளைவை அது கொண்டிருக்கக்கூடும்.

 தடையாக இருக்கும்

தடையாக இருக்கும்

இது தவறு... ஏனெனில், உச்சநீதிமன்றத்தால் கொரோனா வைரஸ் தொடர்பான தீர்வுக்கு தேவையான கடினமான, உறுதியான நடவடிக்கைகளை எடுக்க முடியவில்லை அல்லது விரும்பவில்லை. கடந்த 15 மாதங்களில் தற்போது நெருக்கடியின் உச்சத்தில் இருக்கும் போது உச்சநீதிமன்றம் தலையிட்டுள்ளது. இது திறம்பட நடந்துகொண்டிருக்கும் தீர்வு சார்ந்த நடவடிக்கைகளுக்குத் தடையாக இருக்கும் என்று அபிஷேக் மனு சிங்வி குற்றம்சாட்டினார்.

 ஏன் குறைந்தது?

ஏன் குறைந்தது?

ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளை வீணடித்த போதிலும், கோவிட் நிர்வாகத்திற்கு முறையான உள்கட்டமைப்புகளை கொண்டு வர அரசாங்கம் ஏன் தவறிவிட்டது என்றும் சிங்வி கேள்வி எழுப்பினார். நோய்த்தொற்று மற்றும் இறப்பு குறித்த தகவலை அரசாங்கம் ஏன் அறிக்கையிடுகிறது என்றும், டெல்லி போன்ற இடங்களில் சோதனைகள் எண்ணிக்கை ஏன் குறைந்துவிட்டது? என்றும் சிங்வி கேள்வி எழுப்பினார்.

English summary
SC intervention in COVID-19 management is wrong - கொரோனா
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X