உத்தரபிரதேச வன்முறை.. அதிர்ச்சி வீடியோ.. தானாக களமிறங்கிய உச்சநீதிமன்றம்.. இன்று விசாரணை!
டெல்லி: உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் நடந்த வன்முறைதான் இப்போது நாடு முழுவதும் பேசும் பொருளாக உள்ளது. லக்கிம்பூர் மாவட்டத்தில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா, அவரது மகன் மற்றும் உத்தரபிர பிரதேச துணை முதல்வர் ஆகியோர் ஒரு விழாவில் கலந்து கொள்ள இருந்தனர்.
அப்போது அவர்களுக்கு எதிராக விவசாயிகள் கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தினார்கள். அப்போதுஅங்கு காரில் வந்த மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் விவசாயிகள் கூட்டத்தில் காரை மோத செய்தார்.

அதிர்ச்சி வீடியோ
இதன்பினர் போராட்டம் வன்முறையாக மாறியது. பாஜக தொண்டர்களுக்கும், விவசாயிகளுக்கும் மோதல் மூண்டது. இதில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் பரிதாபமாக இறந்தனர். மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் விவசாயிகள் கூட்டத்தில் காரை மோத செய்ததாக கூறப்படும் வீடியோவை காங்கிரஸ் வெளியிட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆறுதல் கூறினார்கள்
முதல் ஆளாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி லக்கிம்பூருக்குச் செல்ல முயன்றபோது போலீஸார் அவரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அதன்பின்னர் தனது மனதை மாற்றிய உத்தரபிரதேச அரசு தலைவர்களை லக்கிம்பூர் செல்ல அனுமதித்தது. இதன் பின்னர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், பஞ்சாப் முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி உள்ளிட்டோர் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் லக்கிம்பூர் சென்று லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

கைது செய்ய வேண்டும்
நாடு முழுவதும் லக்கிம்பூர் வன்முறைக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் இருந்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மத்திய அமைச்சர் அருண் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவரது மகனை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

உச்சநீதிமன்றம் விசாரணை
இந்த நிலையில் லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணை நடத்த இருக்கிறது .உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக வழக்கை இன்று விசாரிக்க இருக்கிறது, அஜய் மிஸ்ராவின் மகன் மீது விவசாயிகள் கொலை குற்றம் சுமத்தி வரும் நிலையில் உச்ச நீதிமன்ற விசாரணை மிகுந்த எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications