டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கர்ப்ப காலத்தில் அசைவம் சாப்பிடலாமா! தாய்ப்பாலில் உள்ள பூச்சிக்கொல்லிகள்? சிசுவின் உயிருக்கே ஆபத்து

கருவுற்று இருக்கும் பெண்கள் நான்வெஜ் சாப்பிடலாமா என்பது குறித்து விளக்கும் புதிய ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: அசைவ உணவு உண்பவர்களை விடச் சைவ உணவுகளை உண்ணும் பெண்களின் பாலில் பூச்சிக்கொல்லி மருந்துகள் குறைவாகவே உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாறி வரும் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் உள்ளிட்ட பல காரணங்களால் இப்போது பல்வேறு வகையான உடல்நிலை பாதிப்புகள் ஏற்படும் ஆபத்து உள்ளது. முன்பு அரிதாக ஏற்பட்ட நோய்களும் இப்போது பரவலாக ஏற்படத் தொடங்கியுள்ளது.

இதனால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது. அதிலும் கருவுற்று இருக்கும் தாய்மார்கள் கவனமுடன் உணவுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

உயிரே போகும்.! உயிரே போகும்.! "பக்கவாதம்.." இந்த ரத்த பிரிவு இருக்கா உங்களுக்கு.. கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள்

 உத்தரப் பிரதேசம்

உத்தரப் பிரதேசம்

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் குயின் மேரி மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஆய்வில், மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் கடந்த பத்து மாதங்களில் இறந்த குழந்தைகள் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டன. அதில் பிறந்த சில மாதங்களில் உயிரிழந்த 111 குழந்தைகளின் இறப்புக்குப் பெண்களின் பாலில் இருக்கும் பூச்சிக்கொல்லிகளே காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.. இந்த ஆய்வில் கர்ப்பிணிப் பெண்களின் பாலில் பூச்சிக்கொல்லி மருந்து இருப்பது தெரியவந்துள்ளது.

 பூச்சிக்கொல்லி

பூச்சிக்கொல்லி

இது தொடர்பாக அங்கு வரும் 130 சைவ மற்றும் அசைவ கர்ப்பிணிப் பெண்களிடம் விரிவான சோதனை நடத்தப்பட்டது. பேராசிரியர் சுஜாதா தேவ், டாக்டர் அப்பாஸ் அலி மெஹந்தி மற்றும் டாக்டர் நைனா த்விவேதி ஆகியோரால் தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. அதில் அசைவ உணவு உண்பவர்களை விடச் சைவ உணவுகளை உண்ணும் பெண்களின் பாலில் பூச்சிக்கொல்லி மருந்துகள் குறைவாகவே உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நான்வெஜ்

நான்வெஜ்

அதற்காகச் சைவ உணவு உண்ணும் பெண்கள் பாலில் பூச்சிக் கொல்லி மருந்துகளே இல்லை எனச் சொல்ல முடியாது. சைவ உணவு சாப்பிடும் பெண்களின் தாய்ப்பாலில் பூச்சிக்கொல்லி மருந்து இருக்கிறது. இருப்பினும், அது ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலில் உள்ள பூச்சிக்கொல்லி மருந்துக்கு ரசாயன விவசாயம் தான் காரணம் என்றும் அவர்கள் ஆய்வில் தெரிவித்துள்ளனர். இப்போது பெரும்பாலான விவசாயத்திற்குப் பூச்சிக்கொல்லிகள் மற்றும் ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டே வருகிறது.

 என்ன காரணம்

என்ன காரணம்

அசைவ உணவு உண்ணும் பெண்ணின் பாலில் பூச்சிக்கொல்லி மருந்து அதிகம் இருக்கிறது. அதற்குக் கோழி, ஆடுகளுக்குத் தரப்படும் சப்ளிமெண்ட்ஸ் மற்றும் ரசாயனங்களே காரணமாகும். அசைவ உணவு உண்ணும் பெண்ணின் தாய்ப்பாலில் உள்ள பூச்சிக்கொல்லி மருந்து சைவப் பெண்களை விட மூன்று மடங்கு அதிகமாக உள்ளதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு இறைச்சி அல்லது சைவ உணவுகள் கொடுக்கப்படாது.

 மோசமான பாதிப்பு

மோசமான பாதிப்பு

இருப்பினும், தாயின் பால் மூலம் பூச்சிக்கொல்லி மருந்துகள் குழந்தைகளுக்குச் செல்வதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. தாய்ப்பாலில் சிறிய அளவே பூச்சிக்கொல்லி மருந்துகள் இருந்தாலும் கூட, அவை குழந்தைகளை மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இதற்கிடையில், குறிப்பிட்ட இடத்தில் குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கும் காரணத்தைக் கண்டறிய முதன்மை வளர்ச்சி அதிகாரி தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை மாவட்ட ஆட்சியர் அமைத்துள்ளார்.

 அடுத்தகட்ட நடவடிக்கை

அடுத்தகட்ட நடவடிக்கை

தாய் மற்றும் சிசு இறப்பு எண்ணிக்கை ஏன் அங்கு அதிகரிக்கிறது என்பது குறித்து இந்த குழு தனியாக ஆய்வு செய்ய உள்ளது. அவர்கள் மற்ற ஆய்வாளர்களுடன் இணைந்து புதிதாகப் பிறந்த குழந்தைகளின் இறப்புக்கான காரணத்தையும் கண்டுபிடிப்பார்கள். அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். இந்தச் சூழலில் பூச்சிக்கொல்லி மருந்துகள் குறித்துக் கிடைத்துள்ள ஆய்வு முடிவுகள் பகீர் தருபவையாகவே உள்ளது.

English summary
Non-vegetarian women might carry pesticides to the newborn: Can we eat Non-vegetarian while pregnant.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X