இந்திய கப்பல்களுக்கு மட்டும் வழிவிடும் ஈரான்.. தமிழகத்திற்கு கிடைத்த மெகா நல்ல செய்தி.. சூப்பர்ல
டெல்லி: ஹார்முஸ் ஜலசந்தியை பத்திரமாகக் கடந்து மற்றொரு கப்பல் இந்தியாவுக்கு வந்துள்ளது. மத்திய கிழக்கு மோதல் காரணமாக இந்தியாவில் கேஸ் நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில், அடுத்தடுத்து இரு கப்பல்கள் வந்துள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அதில் கணிசமான கேஸ் மற்றொரு கப்பலுக்கு மாற்றப்பட்டு தமிழகம் வரவுள்ளது. இதனால் கேஸ் சப்ளை சிக்கல் பரவலாகக் குறையும் எனத் தெரிகிறது.
இப்போது உலக கச்சா எண்ணெய் மற்றும் LNGயில் ஐந்தில் ஒரு பங்கு ஹார்முஸ் வழியாகச் செல்கிறது. மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக இந்த சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவுக்கு எல்பிஜி கேஸ் வருவதும் பாதிக்கப்பட்ட நிலையில், நாடு முழுக்க கடந்த சில நாட்களாகவே சப்ளையில் சிக்கல் இருந்தது.

இந்தியாவுக்கு வந்த கப்பல்
இதற்கிடையே ஹார்முஸ் ஜலசந்தியை பத்திரமாகக் கடந்து மற்றொரு கப்பல் இந்தியாவுக்கு வந்துள்ளது. இந்த கப்பலில் 46,500 டன் திரவ பெட்ரோலிய எரிவாயு, அதாவது எல்பிஜி இருக்கிறது. 'நந்தா தேவி' என்ற இந்த இந்தியக் கப்பல் செவ்வாய்க்கிழமை குஜராத் வந்தடைந்தது. கடந்த இரண்டே நாட்களில் இந்தியா வந்த இரண்டாவது LPG கப்பல் இதுவாகும். அதற்கு முந்தைய நாள், அதாவது திங்கள்கிழமை தான் 40,000 மெட்ரிக் டன் LPGயுடன் 'சிவாலிக்' கப்பல் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தை அடைந்தது. இந்தச் சூழலில் தான் 2வது போர்க்கப்பல் இந்தியாவுக்கு வந்துள்ளது.
பேச்சுவார்த்தை
மத்தியக் கிழக்கு போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் கடல் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் தான் மத்திய அரசு நேரடியாக ஈரான் உடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதைத் தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தியில் இந்தியாவுக்கு வரும் கப்பல்களை அனுமதிக்க ஈரான் முடிவு செய்தது. அதைத் தொடர்ந்தே இப்போது இரு கப்பல்கள் இந்தியா வந்தடைந்துள்ளது.
மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் இந்தியக் கப்பல் கழகத்தின் முயற்சியால், இந்திய, ஈரானிய கடற்படைகளின் உதவியுடன் இந்தக் கப்பல்கள் பத்திரமாக வந்தடைந்ததாக நந்தா தேவி கப்பலின் தலைமை அதிகாரி தெரிவித்தார். வரும் காலங்களில் மத்திய கிழக்கில் இருந்து வரும் கப்பல்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றே தெரிகிறது.
தமிழகம் வருகிறது
முதலில்'நந்தா தேவி' கப்பல் கண்ட்லா துறைமுகத்திற்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து லாரிகளுக்கு மாற்றப்பட்டு நாடு முழுக்க சப்ளை செய்யப்பட இருந்தது. இருப்பினும், தரைவழியில் கொண்டு சென்றால் தாமதம் ஆகும் என்பதால் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது. அதன்படி கப்பல் வதினார் அருகே நடுக்கடலில் நிறுத்தப்பட்டது. அதில் இருந்த LPG கேஸ் எம்.டி. பி.டபிள்யூ. ப்ரீஸ் மற்றும் எம்.டி. ஜக் பிரதாப் கப்பல்களுக்கு மாற்றப்பட்டு, விரைவாகத் தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படும். இது போக்குவரத்து நேரத்தைச் சேமிக்கும்.
ஹார்முஸ் ஜலசந்தி
எல்பிஜி கேஸை இறக்குமதி செய்வதில் உலகின் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா இருக்கிறது. அது தனது இறக்குமதியில் மத்தியக் கிழக்கையே பெரிதும் சார்ந்துள்ளது. இந்தச் சூழலில் தான் கடந்த சில நாட்களாகவே கேஸ் சிலிண்டர் சப்ளை பாதிக்கப்பட்டு இருந்தது. இந்தச் சூழலில் இரு கப்பல்கள் அடுத்தடுத்து வந்துள்ளது பிரஷரை குறைக்கும்.
அதேநேரம் தற்போது சுமார் 3 லட்சம் டன் LPGயுடன் ஆறு கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ளன. அது உட்பட மொத்தம் 22 இந்தியக் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையில் சிக்கியுள்ளன. இந்த 22 கப்பல்களில் 6 எல்பிஜி கப்பல்கள், ஒரு LNG டேங்கர், நான்கு கச்சா எண்ணெய், ஒரு ரசாயன கப்பல்கள், இரண்டு மொத்த சரக்குக் கப்பல்கள் அடங்கும்.
-
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications