"இட ஒதுக்கீடு சமூக மாற்றத்திற்கான கருவி.. சமத்துவமின்மை இருக்கும் வரை அது தொடர வேண்டும்.." ஆர்எஸ்எஸ்
டெல்லி: இட ஒதுக்கீடு முறைக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு தனது வலுவான ஆதரவை எப்போதும் அளித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபலே, சமூகத்தில் சமத்துவமின்மை நீக்கப்படும் வரை இட ஒதுக்கீடு முறை தொடர வேண்டும் எனத் தெரிவித்தார்.
பல நூறு ஆண்டுகளாக சமூக மற்றும் கல்வி ரீதியில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மத்திய அரசின் கல்வி நிறுவனங்களிலும், வேலைவாய்ப்புகளிலும் 50% இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.
அதேபோல மாநில அளவிலும் ஒவ்வொரு மாநிலத்திலும் அங்குள்ள மக்கள்தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படுகிறது. அதன்படி தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது.

இட ஒதுக்கீடு
காலம்காலமாக சமூக மற்றும் கல்வி ரீதியில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தாலும்கூட, இதற்கு எதிராகச் சிலர் தொடர்ந்து கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இட ஒதுக்கீடு முறை காரணமாகவே இந்தியாவால் எந்தத் துறையிலும் முழு திறனை வேலைப்படுத்த முடியவில்லை என்ற குற்றச்சாட்டுகளைச் சிலர் வைக்கின்றனர். பெரும்பாலும் வலதுசாரி சிந்தனை கொண்டவர்களே இட ஒதுக்கீடு முறைக்கு எதிராகக் கருத்துகளைக் கூறி வரும் நிலையில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுச் செயலாளர் இப்போது இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளார்.

புத்தக வெளியிட்டு விழா
இந்தியா ஃபவுண்டேஷன் என்ற சார்பில் "Makers Of Modern Dalit History" என்ற புத்தம் வெளியிட்டு விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபலே, "தலித்துகளின் வரலாறு இல்லாமல் இந்தியாவின் வரலாறு முழுமையடையாது. இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இந்தியாவின் வரலாறும் தலித்துகளின் வரலாறும் வேறு வேறானது இல்லை" என்று அவர் குறிப்பிட்டார்.

எப்போதும் ஆதரவு
தொடர்ந்து இட ஒதுக்கீடு குறித்துப் பேசிய அவர், "நானும் சரி, ஆர்எஸ்எஸ் அமைப்பும் சரி எப்போதும் இட ஒதுக்கீடு முறைக்கு ஆதரவானவர்கள் தான். இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை. சமூக நல்லிணக்கமும் சமூக நீதியும் எங்களுக்கு வெறும் அரசியல் ரீதியிலான கொள்கை மட்டுமில்லை. இதை நாங்கள் முழுமையாக நம்புகிறோம். இட ஒதுக்கீடு என்பது இந்தியாவுக்கு வரலாற்றுத் தேவை.
Recommended Video

எப்போது வரை தொடர வேண்டும்
சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினர்கூட சமத்துவமின்மையை அனுபவிக்கும் வரை இட ஒதுக்கீடு முறை தொடர வேண்டும். சமூகத்தில் ஒரு மாற்றத்தை அளிக்கும் கருவி தான் இட ஒதுக்கீடு முறை. சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் இடையே இட ஒதுக்கீடு மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை நாம் ஒன்றாக எடுத்துச் செல்ல வேண்டும். சமூகத்தில் மிகப் பெரிய மாற்றத்திற்கு வழிவகுத்த ஆளுமைகளை தலித் தலைவர்கள் என்று சுருக்குவது நியாயமற்றது, ஏனெனில் அவர்கள் ஒட்டுமொத்த சமூகத்திற்கான தலைவர்கள்.

திட்டவட்டம்
பட்டியலித்தவர் பற்றி நாம் விவாதிக்கும்போது, இட ஒதுக்கீடு போன்ற சில அம்சங்கள் இடம் பெறுவதை நம்மால் தவிர்க்க முடியாது. பல்வேறு சூழல்களிலும் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டங்கள் நடந்தபோதிலும், நாங்கள் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்துள்ளோம். இதில் எந்த ஒரு மாற்றுக்கருத்தும் எங்களுக்கு இல்லை" என்று அவர் தெரிவித்தார்.
-
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications