மகாராஷ்டிராவில் மேலும் 7 பேருக்கு ஓமிக்ரான் வைரஸ் உறுதி.. 3 வயது குழந்தையும் பாதிக்கப்பட்ட சோகம்!
டெல்லி: தென்னாப்பிரிக்காவில் புதிய வகை உருமாறிய ஓமிக்ரான் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த புதிய வகை உருமாறிய கொரோனா B.1.1529 என்று அழைக்கப்படுகிறது.
30 முறை உருமாற்றம் அடைந்துள்ளதாக கூறப்படும் இந்த மிகவும் ஆபத்தானது என்று உலக சுகாதார அமைப்பும் எச்சரிக்கை விடுத்துள்ளது. முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்ட மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் டெல்டாவை வைரஸை விட இது வீரியம்மிக்கது என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஓமிக்ரான் வைரஸ்
ஓமிக்ரான் வைரசால் இந்தியாவும் உஷராகியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளிடம் இருந்து வருபவர்களை விமான நிலையங்களில் தீவிரமாக பரிசோதிக்கும்படி மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஓமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தலால் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விமான நிலையங்களில் மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

மகாராஷ்டிரா, குஜராத்
ஆனாலும் ஓமிக்ரான் வைரஸ் இந்தியாவுக்குள்ளும் புகுந்து விட்டது. முதன் முதலில் கர்நாடகாவில்தான் ஓமிக்ரான் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களுக்கும் பரவியது. ஏற்கனவே இந்தியாவில் 25 பேருக்கு ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

மகாராஷ்டிராவில் மேலும் 7 பேர்
இந்த நிலையில் மகாராஷ்டிராவில் மேலும் 7 பேருக்கு ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஓமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. மகாஷ்டிராவின் 7 பாதிப்புகளில் 3 பாதிப்புகள் மும்பையில் இருந்தும், 4 பிம்ப்ரி சின்ச்வாட் பகுதியில் இருந்தும் பதிவாகி உள்ளன.

3 வயது குழந்தை
மகாராஷ்டிராவில் இன்று கண்டறியப்பட்ட ஏழு புதிய ஓமிக்ரான் நோயாளிகளில், நான்கு பேருக்கு முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டது, ஒருவருக்கு ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது மேலும், ஒருவருக்கு தடுப்பூசி ஏதும் போடப்படவில்லை என்பது தெரியவந்தது. பாதிக்கப்பட்டவர்களில் 3 வயது குழந்தை ஒன்றும் உள்ளது என்பதுதான் மிகப்பெரும் சோகம்.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா












Click it and Unblock the Notifications