அரசியலில் அதிரடி ட்விஸ்ட்! திடீரென மோடியை சந்தித்த சரத் பவார்.. குழப்பத்தில் சிவசேனா, காங்கிரஸ்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் முன்னறிவிப்பின்றி சந்தித்து பேசி இருப்பது மகாராஷ்டிர மாநில அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
2019 ஆம் ஆண்டு பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட சிவசேனா கட்சி, தேர்தலுக்கு பின்னர் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தது.
மகா விகாஸ் அகாடி என்ற அந்த கூட்டணி உருவான பின்னர் பாஜகவுக்கு எதிராக சிவசேனா கட்சியினரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியினரும் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.

அடுத்தடுத்து குறிவைக்கப்படும் தலைவர்கள்
இந்த நிலையில் பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்த மகாராஷ்டிரா தலைவர்களின் வீடுகளில் அடுத்தடுத்து அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக அம்மாநில அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான நவாப் மாலிக் பழைய வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அதேபோல் பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்த சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது.

மோடியுடன் பவார் திடீர் சந்திப்பு
இப்படி அடுத்தடுத்து அமலாக்கத்துறை சோதனைக்கு மகாராஷ்டிரா ஆளும் கூட்டணி தலைவர்கள் இலக்காகி வரும் சூழலில்தான் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருக்கிறார் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார். இரு தலைவர்கள் 20 முதல் 25 நிமிடங்கள் பேசிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து எந்தவிதமான முன்னறிவிப்பும் வழங்கப்படாததே சொந்த கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சிகள் இடையே குழப்பத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

தெரியாது என்று சொல்லும் அஜித் பவார்
மகாராஷ்டிரா துணை முதலமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித் பவாரும் இந்த சந்திப்பு குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், "எனக்கு இந்த சந்திப்பு பற்றி தெரியாது. எனக்கு ஏதேனும் தகவல் தெரிந்தால்தானே சொல்ல முடியும். ஒரு நாட்டின் பிரதமரும் ஒரு தேசியக் கட்சியின் தலைவரும் சந்திக்கிறார்கள் என்றால் அது வளர்ச்சி பற்றியதாகவே இருக்கும். விவாதிப்பதற்கு பல முக்கிய விசயங்கள் உள்ளன. இருவரும் பெரும் தலைவர்கள். அவர்கள் என்ன பேசினார்கள் என்று எனக்கு தெரியாது." என்றார்.

"அமலாக்கத்துறை ரெய்டு பற்றி பேசி இருப்பார்"
இதுகுறித்து பாஜக மூத்த தலைவரும் மகாராஷ்டிரா எதிர்க்கட்சித் தலைவருமான பிரவின் டரேகர் பேசியதாவது, "பாஜக, தேசியவாத காங்கிரஸ் இடையே எந்த கசப்புணர்வும் இல்லை. மகா விகாஸ் அகாடி கூட்டணியை சேர்ந்த தலைவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. 2 தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் சிறையில் உள்ளனர். சில சிவசேனா தலைவர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. பிரதமர் சரத் பவார் சந்தித்ததற்கு இதுவும் காரணமாக இருக்கலாம்." என்றார்.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications