பாடகர் மூஸ் வாலா கொலையில் சர்வதேச கனெக்ஷன்! நேபாளத்திற்கு பறந்த டெல்லி போலீஸ்! திடுக் திருப்பங்கள்
டெல்லி: பஞ்சாப் பாடகர் சித்து மூஸ் வாலா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சர்வதேச அளவில் இருக்கும் தொடர்புகள் அம்பலமாகத் தொடங்கி உள்ளது.
28 வயதான பஞ்சாப் பாடகர் சித்து மூஸ் வாலா கடந்த வாரம் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் பஞ்சாபில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சித்து மூஸ் வாலா வெறும் பாடகர் மட்டுமில்லை. காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர், கடந்த பஞ்சாப் தேர்தலில் வேட்பாளராகவும் போட்டியிட்டு இருந்தார்.

படுகொலை
இவர் கடந்த மே 29ஆம் தேதி பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் உள்ள ஜவஹர்கே என்ற இடத்தில் தனது ஜீப்பில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென அவர் மீது சரமாரியா துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அவர் உயிரிழந்தார் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான், இவரது உடல் தகனம் செய்யப்பட்டது. அப்போது பெருந்திரளான ரசிகர்களும், காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களும் அங்குத் திரண்டனர்.

தீவிர விசாரணை
பஞ்சாப் ஆம் ஆத்மி அரசு விஐபி கலாசாரத்தை ஒழிக்கிறோம் என்று கூறி இவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை வாபஸ் பெற்ற மறுநாளே இந்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சித்து மூஸ் வாலாவை கொலை செய்தவர்களைப் பிடிக்கும் பணிகளையும் போலீசார் தீவிரப்படுத்தினர். கொலையாளிகள் பயன்படுத்தி வாகனத்தைக் கண்டுபிடித்த போலீசார், அந்த வாரை வழங்கியதாக இரு நபர்களை ஃபதேஹாபாத்தில் வைத்து கைது செய்தனர்.

நேபாளம்
இந்நிலையில், டெல்லி போலீசின் சிறப்புப் பிரிவுக்குக் கிடைத்த ரகசியத் தகவல்களின் அடிப்படையில், கொலையாளிகளைப் பிடிக்க நேபாளத்திற்கு விரைந்துள்ளனர். மான்சா மாவட்டத்தில் மூஸ் வாலாவை படுகொலை செய்த பின்னர், அவர்கள் இமயமலை அருகே நேபாளத்தில் பதுங்கி உள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு விரைந்துள்ளனர். விரைவில் அங்கு வைத்து சிலர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

கனடா
இரு வேறு கேங்களுக்கு இடையே இருந்த மோதல் காரணமாக மூஸ் வாலா படுகொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதற்கிடையே டெல்லி போலீஸ் சிறப்புப் பிரிவு கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோயை மூன்று நாள் காவலில் எடுத்து விசாரித்தது. அப்போது அவர் கனடாவைச் சேர்ந்த கோல்டி ப்ரார் உள்ளிட்ட அவரது மூஸ்வாலாவை கொல்ல சதித்திட்டம் தீட்டியதை ஒப்புக்கொண்டார்.

பழிக்குப் பழி
இந்த கோல்டி ப்ரார் தான் ஏற்கனவே தனது பேஸ்புக் பக்கத்தில் மூஸ் வாலா படுகொலைக்குப் பொறுப்பு ஏற்று இருந்தார். கேங்ஸ்டர் விக்கி மிதுகேராவின் மரணத்திற்குப் பழிவாங்குவதற்காக மூஸ் வாலாவை கொன்றதாக கோல்டி ப்ரார் கூறினார். சித்து மூஸ் வாலா படுகொலையில் சர்வதேச தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், வரும் காலத்தில் விசாரணையில் மேலும் பல திருப்பங்கள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications