டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

10 மீ வரை பாயும் எச்சில் துளிகள்.. இரண்டல்ல.. இனி 3 விஷயங்களில் கவனமாக இருங்க.. மத்திய அரசு

Google Oneindia Tamil News

டெல்லி :கோவிட் -19 வைரஸ் பரவுவதை தடுத்து நிறுத்துவதில் காற்றோட்டம் மிக முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என்று மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. காற்றில் கொரோனா வைரஸை பரப்பும் ஏரோசெல்கள் (நீர்துளிகள்) 10 மீட்டர் வரை பயணிக்கும் என்றும், காற்றோட்டம் இல்லாத அறையில் கொரோனா எளிதாக பரவும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    அக்கம் பக்கத்தில் பேசினால் கூட Mask போடுங்க.. 6 அடி இடைவெளியை கடைபிடிங்க.. Dr Prakash

    கொரோனா வைரஸ் பரவலை எவ்வாறு கட்டுப்படுத்துவது, பொதுமக்கள் பாதிப்பில் இருந்து எப்படி தற்காத்துக்கொள்வது என்பது தொடர்பாக மத்திய அரசு புதிய வழிகாட்டுதல்களையும், அறிவுறுத்தல்களையும் வெளியிட்டு வருகிறது. அவ்வகையில், கொரோனாவின் 2வது அலை பரவலை தடுக்க மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் கே விஜயராகவனின் அலுவலகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

    அடுத்தடுத்து கூண்டோடு விலகல்... மாயமாகிறதா மக்கள் நீதி மய்யம்? பா. கிருஷ்ணன் அடுத்தடுத்து கூண்டோடு விலகல்... மாயமாகிறதா மக்கள் நீதி மய்யம்? பா. கிருஷ்ணன்

    தடுப்பூசி போட்டிருந்தாலும் போடாவிட்டாலும், கொரோனா தொற்றுநோயை அழிப்பதற்கு முககவசம், உடல் ரீதியான தூரம் மற்றும் காற்றோட்டம் ஆகிய மூன்று கொள்கைகளை ஒருவர் எப்போதும் மறந்துவிடக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆபத்து குறைவு

    ஆபத்து குறைவு


    "நீங்கள் இருக்கும் அறை காற்றோட்டமான அறைகளாக இருக்க வேண்டும், வெளிப்புறக் காற்று உள்ளே செல்வதை, உள்காற்று வெளியே செல்வதை உறுதி செய்வதன் மூலம் வைரஸின் ஆபத்தை குறைக்க முடியும் என்று வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஏரோசெல்கள் பரவும்

    ஏரோசெல்கள் பரவும்


    மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் கொரேனா பரவல் குறித்து ஒரு முக்கியமான கருத்தை தெரிவித்துள்ளது. பெரிய அளவிலான உமிழ்நீர் மற்றும் நாசி நீர்த்துளிகள் வடிவில் உடனே தரையில் விழுந்துவிடும். ஆனால் சிறிய ஏரோசல் துகள்கள் (சிறிய நீர்துளிகள்) 10 மீட்டர் வரை காற்றில் செல்லக்கூடியது.

    எக்சாஸ் பேன்கள்

    எக்சாஸ் பேன்கள்

    அசுத்தமான காற்று வேறொருவருக்கு நேரடியாகப் செல்லும் இடத்தில் மின்விசிறி இருக்கக்கூடாது என்பதால் மின்விசிறியின் இடமும் முக்கியமானது.
    ஒரு அறையின் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் மூடப்பட்டால், காற்றி அறையில் இருந்து வெளியேற்றும் மின்விசிறிகள் ( எக்ஸாஸ்ட் பேன்கள்) தொடர்ந்து இயங்க வேண்டும். இவை உட்புற நோய்த்தொற்றிலிருந்து அதிகபட்ச பாதுகாப்பிற்கான சிறந்த காற்றோட்டத்தை நமக்கும் தரும்.

    அலுவலக அறைகள் எப்படி

    அலுவலக அறைகள் எப்படி

    பணியிடங்களைப் பற்றி வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அலுவலக அறைகளில் மின்விசிறிகளுடன். எக்ஸாஸ்ட் பேன்களை இயக்க வேண்டும் என்றும், ஜன்னல்கள் மற்றும் கதவுகளை அகலமாக திறந்து வைக்க வேண்டும் எனறும் இதனால் சுத்தமான காற்று நுழைந்து வைரஸ் துகள்களை நீர்த்துப்போக செய்யும்.

    கொரோனா பரவல் எப்படி

    கொரோனா பரவல் எப்படி

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரின மூக்கு மற்றும் வாயில் இருந்து வரும் நீர்த்துளிகள், ஏரோசோல்களின் வடிவத்தில் வெளியேற்றப்படுகிறநது. இதுவே வைரஸ் பரவுதலின் முதன்மை முறை என்று எச்சரித்துள்ளது. அறிகுறிகள் இல்லாமல் பாதிக்கப்பட்ட நபரும் வைரஸை பரப்புகிறார். மூடப்பட்ட காற்றோட்டம் இல்லாத அறைகளின் உட்புற இடங்களில், நீர்த்துளிகள் மற்றும் ஏரோசோல்கள் விரைவாக குவிந்து, அப்பகுதியில் உள்ள மக்களுக்கு கொரோனா பரவும் அபாயத்தை பெரிதும் அதிகரிக்கின்றன" என்று மத்திய அரசின் வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எப்படி அணிய வேண்டும்

    எப்படி அணிய வேண்டும்

    அதிகபட்ச பாதுகாப்பை வழங்கும் இரட்டை அடுக்கு முககவசம் அல்லது N95 முககவசத்தை அனைவரும் அணிய வேண்டியதன் அவசியத்தையும் மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜயராகவன் வலியுறுத்தி உள்ளார். அறுவைசிகிச்சைக்காக பயன்படுத்தும் சாதாரண முககவசத்தைஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

    English summary
    The office of principal scientific adviser stated a crucial point that larger size of saliva and nasal discharge in the form of droplets fall to the ground and on surfaces, and smaller aerosol particles are carried in the air up to 10 metres.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X