டெல்லி மருத்துவமனையில் சோனியா காந்தி.. இரவு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் ஹாஸ்பிட்டலில் அட்மிட்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி திடீரென சற்று நேரத்திற்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவர் சோனியா காந்தி. 78 வயதான சோனியா காந்தி ஏற்கனவே வயது மூப்பு காரணமாக அவர் தீவிர அரசியலில் இருந்து சற்று விலகியே இருக்கிறார். இதன் காரணமாகவே கடந்த லோக்சபா தேர்தலில் கூட அவர் போட்டியிடவில்லை. இப்போது ராஜ்யசபா எம்பியாகவே இருக்கிறார்.

Sonia Gandhi Admitted to Delhi s Ganga Ram Hospital due to stomach problem

இதற்கிடையே இன்று இரவு திடீரென சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிற்று வலி காரணமாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சோனியா காந்தி இப்போது இரைப்பைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது உடல்நிலையைக் கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். சோனியா காந்தி உடல்நலம் சீராகி விரைவில் டிஸ்சார்ஸ் ஆக வேண்டும் எனக் காங்கிரஸ் தொண்டர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+