அவர் மட்டும்தான்.. மோடி, அமித் ஷாவிற்கு எதிராக குரல் கொடுத்த தேர்தல் அதிகாரி.. யார் இந்த அசோக் லவசா?
பிரதமர் மோடி தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரம் செய்துள்ளார், அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைய அதிகாரி அசோக் லவசா தெரிவித்துள்ளார்.
டெல்லி: பிரதமர் மோடி தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரம் செய்துள்ளார், அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைய அதிகாரி அசோக் லவசா தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் தேர்தல் விதிமுறை மீறல்தான் தற்போது ஹாட் டாப்பிக். தேர்தல் ஆணையம் ''விதிமுறை மீறல்'' என்று குறிப்பிட்டு இருக்கும் விஷயங்களை பிரதமர் மோடி பேசுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.
தேர்தல் ஆணையமோ அவர் மீதான புகார்களில், அவர் மீது தவறு எதுவும் இல்லை என்று தீர்ப்பு வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளது. அதேபோல் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா மீதும் இந்த புகார்கள் வைக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளது.

என்ன பிரச்சனை
பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் தேர்தல் விதிமுறை மீறல் செய்ததாக புகார் உள்ளது. இவர்கள் இருவரும் மீதும் 8 க்கும் மேற்பட்ட புகார்கள் உள்ளது. இதில் 6 வழக்குகள் மீது ஏற்கனவே தேர்தல் ஆணையம் முடிவெடுத்து இருக்கிறது. நாளை இது தெடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடக்கிறது.

என்ன முடிவு எடுத்தனர்
பிரதமர் மோடி பாலக்கோடு தாக்குதல், அபிநந்தன் குறித்து பேசியது, இஸ்லாமியர்கள் குறித்து பேசியது, மைனாரிட்டி என்று தாக்கி பேசியது ஆகியவை குறித்து புகார்கள் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட 6 புகார்களிலும் மோடி மீது எந்த தவறும் இல்லை என்று தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

யார் வழங்கியது
மொத்தம் மூன்று பேர் இந்த புகாரை விசாரித்தனர். தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் அதிகாரிகள் அசோக் லவசா மற்றும் சுஷில் சந்திரா ஆகியோரை விசாரணை நடத்தினார்கள். இதில் இரண்டு அதிகாரிகள் மோடி மீது தவறு இல்லை என்று முடிவெடுத்து இருக்கிறார்கள். ஆனால் அசோக் லவசா மோடிக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

அசோக் லவசா வாக்கு
இவர் 6 வழக்குகளில் 4 வழக்கில் மோடிக்கு எதிராக வாக்களித்தார். 6 வழக்குகளிலும் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் அதிகாரி சுஷில் சந்திரா மோடிக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதேபோல் அமித் ஷாவிற்கு எதிரான அனைத்து வழக்கிலும் அசோக் லவசா அவருக்கு எதிராக வாக்களித்தார்.

யார் இவர்
அசோக் லவசா 1980ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவர் 2018ல் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவர் 2021ல் தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பதவிக்காலம் முடிந்த பின் பதவி ஏற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவர் எதிர்த்தார்
அமித் ஷா மற்றும் மோடி இப்படி பேசியது மிக மிக தவறு என்று அசோக் லவசா கூறி இருக்கிறார். ஆனாலும் மெஜாரிட்டியாக இரண்டு அதிகாரிகள் மோடிக்கு ஆதரவாக நிலைப்பாடு எடுத்தனர். இதனால் மெஜாரிட்டி மோடிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த முடிவு தொடர்பாக நாளை உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications