டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குட் நியூஸ்.. அனைத்து மாநிலங்களிலும் தனியார் க்ளீனிக்குகளை திறக்க அனுமதி- உள்துறை அமைச்சகம் கடிதம்

Google Oneindia Tamil News

டெல்லி: மருத்துவர்கள் மற்றும் பிற சுகாதாரப் பணியாளர்களின் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்யுமாறு மாநிலங்களை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

மருத்துவர்கள் மீதான கட்டுப்பாடுகள் கொரோனா மற்றும் அது அல்லாத பிற மருத்துவ சேவைகளை வழங்குவதில் கடுமையான தடைகளை ஏற்படுத்தும் என்று உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

மாநிலங்களுக்கிடையேயான எல்லைகளை சில மாநிலங்கள் மூடியதையடுத்து, மருத்துவ பணியாளர்கள் போக்குவரத்தும் தடைசெய்ததையடுத்து, டெல்லி உட்பட சில இடங்களில் சுகாதார சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

ஒன்னும் இல்ல.. வீட்டுக்கு போங்க.. தொட்டு பார்க்காமலே சொல்லும் ஆஸ்பத்திரிகள்.. பாவம் சென்னைவாசிகள்ஒன்னும் இல்ல.. வீட்டுக்கு போங்க.. தொட்டு பார்க்காமலே சொல்லும் ஆஸ்பத்திரிகள்.. பாவம் சென்னைவாசிகள்

கடிதம்

கடிதம்

சென்னை உள்ளிட்ட நகரங்களில் தனியார் கிளினீக்குகள் மூடப்பட்டுள்ளதாகவும், மக்கள் அவதிப்படுவதாகவும் செய்திகள் வெளியான நிலையில், மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் அஜய் பல்லா, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கிளினீக்குகள்

கிளினீக்குகள்

மருத்துவ பணியாளர்கள், துணை மருத்துவர்கள், துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் சீராக இயங்க அனுமதிக்குமாறு அனைவரையும் அவர் கேட்டுக் கொண்டார். இதனுடன், அனைத்து மருத்துவ ஊழியர்களுடன், அனைத்து தனியார் கிளினிக்குகள், லேப்கள், நர்சிங் ஹோம்கள் திறக்கப்படுவதை உறுதி செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

சுமை குறையும்

சுமை குறையும்

பல தனியார் கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகள் பல இடங்களில் திறக்க அனுமதிக்கப்படவில்லை என்று தகவல்கள் வந்துள்ளன என்று பல்லா குறிப்பிட்டுள்ளார். வழக்கமான மருத்துவ உள்கட்டமைப்பிற்கு துணைபுரியவும், அரசு மருத்துவமனைகள் மீதான சுமையை குறைக்கவும் இந்த மருத்துவ வசதிகளின் செயல்பாடும் மிக முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டார்.

Recommended Video

    PM Modi’s Video Conference With CMs
    தடையற்ற சேவை

    தடையற்ற சேவை

    "மருத்துவ வல்லுநர்கள் மற்றும் பாரா-மருத்துவ ஊழியர்களின் இயக்கத்தில் எந்தவொரு கட்டுப்பாடுகளும் COVID மற்றும் COVID அல்லாத மருத்துவ சேவைகளை வழங்குவதில் கடுமையான தடைகளுக்கு வழிவகுக்கும். எனவே, இதுபோன்ற அனைத்து மருத்துவ நிபுணர்களின் தடையற்ற இயக்கத்தை உறுதி செய்வது பொது சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், விலைமதிப்பற்ற மனித உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் அவசியம்" என்று அவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார். எனவே தனியார் கிளினீக்குகளை திறக்க, மாநில அரசுகள் அனுமதியளிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    English summary
    Union Home Secretary Ajay Bhalla has written a letter to the chief secretaries of all states and union territories. He has asked everyone to allow medical personnel, paramedics, sanitation workers and ambulances to run smoothly. Along with this, he has also asked to ensure the opening of all private clinics along with all medical staff.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X