டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லி விமான நிலையத்துக்குள் தோட்டா.. ஆசிரியருக்கு வித்தியாசமான தீர்ப்பு.. டெல்லி நீதிமன்றம் அதிரடி

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் உள்ள சர்வதேச இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு துப்பாக்கி குண்டு கொண்டு சென்ற ஆசிரியருக்கு நீதிமன்றம் வித்தியாசமான தண்டனையை வழங்கி உள்ளது.

டெல்லியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் ஒருவர் கடந்த 2008- 2009 ம் ஆண்டில் உத்தரகாண்டில் உள்ள சமோலி நகரில் அமைந்து இருக்கும் பள்ளியில் பிடித்து வந்தார்.

இந்த வேளையில் அவர் சாலையில் கிடந்த துப்பாக்கி குண்டை எடுத்து வைத்து கொண்டார். மேலும் அந்த குண்டுடன் அவர் டெல்லி சர்வதேச இந்திரா காந்தி விமான நிலையத்துக்குள் நுழைந்தார்.

கருணாநிதியின் 8 அடி முழு உருவ சிலை.. ஈரோடு மாவட்டத்தில் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின் கருணாநிதியின் 8 அடி முழு உருவ சிலை.. ஈரோடு மாவட்டத்தில் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

ரத்து செய்யக்கோரி வழக்கு

ரத்து செய்யக்கோரி வழக்கு

இந்த சந்தர்ப்பத்தில் அவரை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். அவரிடம் இருந்து துப்பாக்கி குண்டு கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் தான் தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை அவர் ரத்து செய்யக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

 தீர்ப்பு வழங்கல்

தீர்ப்பு வழங்கல்

இந்த மனுவில், ‛‛பள்ளி படிப்பின்போது கீழே கிடந்த துப்பாக்கி குண்டை எடுத்து வைத்து கொண்ட நான் உள்நோக்கம் ஏதுமின்றி மறதியாக கொண்டு சென்றுவிட்டேன். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்'' என கூறியிருந்தார். இந்த மனு மீது நீதிபதி ஜஸ்மீத் சிங் விசாரணை நடத்தினார். இதையடுத்து நீதிபதி ஜஸ்மீத் சிங் வித்தியாசமான தீர்ப்பு ஒன்றை வழங்கி உள்ளார்.

வித்தியாசமான தீர்ப்பு

வித்தியாசமான தீர்ப்பு

அதன்படி ‛‛ஆசிரியர் மீது பதிவான வழக்கு ரத்து செய்யப்படுகிறது. ஆனாலும் இந்த வழக்கில் போலீசாரின் நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர் சமூக பணி ஒன்றையாற்ற வேண்டும். ஒவ்வொரு பணி நாளின்போதும் படிப்பில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்காக கூடுதலாக 2 மணிநேரம் பள்ளியில் வகுப்பு எடுக்க வேண்டும். இதனை ஒரு மாதம் செய்ய வேண்டும்'' என உத்தரவிட்டார்.

கல்வி இயக்குனரகத்துக்கு உத்தரவு

கல்வி இயக்குனரகத்துக்கு உத்தரவு


மேலும் ஆசிரியர் வகுப்பு எடுக்கிறாரா என்பதை கல்வி இயக்குனரகம் கண்காணிக்க வேண்டும். அதோடு கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி சிறப்பு வகுப்புக்கான ஏற்பாட்டை செய்து கொடுக்க வேண்டும் என அவர் பணியாற்றும் பள்ளி நிர்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

English summary
A court has given a different punishment to a teacher who carried a bullet to the Indira Gandhi International Airport in Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X