டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜப்பானுக்கு பறந்த மோடி.. திடீரென குறுக்கே புகுந்த சு.சாமி.. என்ன இப்படி கேட்டுட்டாரே? பரபர அட்டாக்!

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் மோடியின் ஜப்பான் பயணத்தை பாஜக மூத்த நிர்வாகி சுப்பிரமணியன் சாமி விமர்சனம் செய்துள்ளார்.

கொரோனா காலத்திற்கு பின்பாக பிரதமர் மோடி மீண்டும் வெளிநாடு சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் புத்த பூர்ணிமா நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் மோடி நேபாளம் பயணம் மேற்கொண்டார்.

நேபாள பிரதமர் ஷேர் பகதூர் ட்யூபாவை லும்பினியில் பிரதமர் மோடி சந்தித்தார். பல்வேறு ஒப்பந்தங்கள் குறித்து இரண்டு நாட்டு தலைவர்கள் ஆலோசனை செய்தனர்.

குவாட் மாநாடு: ஜப்பானில் பிரதமர் மோடி- பாரத் மாதா கீ ஜே முழக்கங்களுடன் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு குவாட் மாநாடு: ஜப்பானில் பிரதமர் மோடி- பாரத் மாதா கீ ஜே முழக்கங்களுடன் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு

மோடி பயணம்

மோடி பயணம்

இந்த நிலையில் பிரதமர் மோடி ஜப்பான் சென்றார். ஜப்பானில் இரண்டு நாட்கள் அவர் இருப்பார். பல்வேறு கூட்டங்களில் அவர் கலந்து கொள்ள இருக்கிறார். குவாட் அமைப்பின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார். இடையில் ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக குவாட் அமைப்பில் நிறைய சிக்கல் ஏற்பட்டன. இந்தியாவின் நிலைப்பட்டை குவாட் அமைப்பில் உள்ள அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் விரும்பவில்லை என்று கூறப்பட்டது.

குவாட் அமைப்பு

குவாட் அமைப்பு

இதனால் குவாட் அமைப்பு தொடர்ந்து பயன்பாட்டில் இருக்குமா என்பதே சந்தேகம் ஆனது. இந்த நிலையில்தான் குவாட் அமைப்பை பலப்படுத்துவதற்காக பிரதமர் மோடி ஜப்பான் சென்றுள்ளார். ஜப்பான் சென்ற அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் பிரதமர் ஜப்பான் சென்ற செய்தியை பகிர்ந்து.. மோடியின் இந்திய பயணம் எப்போது என்று கிண்டலாக சுப்பிரமணியன் சாமி கேட்டுள்ளார்.

கிண்டல்

கிண்டல்

அதோடு எனக்கும் மோடிக்கும் தனிப்பட்ட விரோதம் இல்லை. கொள்கை முரண்பாடு மட்டுமே. என்னை பற்றி தரைகுறைவாக பேச அவர் ஆட்களை ட்விட்டரில் நியமித்து இருக்கிறார். என்னுடைய குடும்பத்தை பற்றியும் தரக்குறைவாக அவர்கள் பேசுகிறார்கள். நான் கொள்கை முரண்பாடுகள் பற்றி மட்டுமே ட்விட் செய்வேன். என் மீதான விமர்சனங்கள் நிற்கவில்லை என்றால் நானும் விமர்சனங்களை நிறுத்த மாட்டேன் என்று சுப்பிரமணியன் சாமி குறிப்பிட்டுள்ளார்.

என்ன சொன்னார்?

என்ன சொன்னார்?

பிரதமர் மோடியை ட்விட்டரில் வெளிப்படையாக சுப்பிரமணியன் சாமி சில இடங்களில் விமர்சனம் செய்து இருக்கிறார். பல கொள்கை முடிவுகளை கண்டித்து உள்ளார். பாஜகவில் இருந்தாலும் சில பாஜக தலைவர்களை ட்விட்டரில் விமர்சனம் செய்துள்ளார். முக்கியமாக பெட்ரோல் டீசல் விலை குறித்தும், பொருளாதார நிலை குறித்தும் தொடர்ந்து இவர் விமர்சனங்களை வைத்து வந்தார்.

பாஜக விமர்சனம்

பாஜக விமர்சனம்

ஆனாலும் இவர் மீது பாஜக தலைமை பெரிதாக நேரடி நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. முன்னதாக பிரதமர் மோடி அரசின் ரிப்போர்ட் கார்ட்.. நிதி நிலை - தோல்வி, வெளியுறவுத்துறை - தோல்வி, தேசிய பாதுகாப்பு - பீகாஸஸ் தோல்வி, எல்லை பாதுகாப்பு - சீனா ஊடுருவலால் தோல்வி, உள்நாட்டு பாதுகாப்பு - காஷ்மீரில் தோல்வி என்று பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.

English summary
Subramanian Swamy asks PM Modi when he comes back to India? பிரதமர் மோடியின் ஜப்பான் பயணத்தை பாஜக மூத்த நிர்வாகி சுப்பிரமணியன் சாமி விமர்சனம் செய்துள்ளார்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X