ஆஹா.. மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா.. மக்களே உஷார்.. மத்திய அரசு எச்சரிக்கை
டெல்லி: உலகில் பல நாடுகளில் கொரோனா எண்ணிக்கை பரவலாக அதிகரித்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா தாக்குதல் சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியது. உலகமே லாக்டவுனில் சென்றாலும், பல இழப்புகளை கொரோனா ஏற்படுத்தி இருக்கிறது.
கொரோனா பல உருமாற்றங்களைக் கண்டு, டெல்டா, ஒமிக்ரான் என பல பெயரில் தாக்கத்தை ஏற்படுத்தியது. சமீபத்தில் அதிக அளவில் ஒமிக்ரான் பரவி தாக்கத்தை ஏற்படுத்தியது.

கொரோனா
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 37. 29 கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 44.05 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 44,05,53,009 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 37,29,87,959 பேர் குணமடைந்துள்ளனர்.

உயிரிழப்பு
மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 59,92,483 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 6,15,72,567 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 75,966 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் இருக்கிறது. கொரோனாவால் அமெரிக்காவில் மட்டும் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியா
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு 6,915 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதே எண்ணிக்கை 24 மணி நேரத்தில் 7,554 ஆக அதிகரித்தது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் அகர்வால் கூறுகையில், ''உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல பெரிய நாடுகளிலும் கொரோனா கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது.

அதிகரிப்பு
உலகில் தினமும் சுமார் 15,00,000 வழக்குகள் பதிவாகின்றன. இதனால் மீண்டும் கொரோனா அலை உச்சத்தை தொடும்'' என்று தெரிவித்துள்ளார். உலகம் உழுவதும் தற்போது தான் கொரோனாவின் மூன்றாவது அலை ஓய்ந்தது. ஒமிக்ரானுடன் கொரோனா முடியாது என வல்லுனர்கள் ஏற்கெனவே தெரிவித்திருந்தனர். ஒமிக்ரானிலும் பல உருமாறிய தொற்றுகள் கண்டறியப்பட்டது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications