“நான் சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ்”.. ஜாமீன் பெற நீதிபதியை மிரட்டிய சுகேஷ் சந்திரசேகருக்கு 8 ஆண்டுகள் சிறை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உச்ச நீதிமன்ற நீதிபதி போல் நடித்து, நீதிப​தியை மிரட்டி ஜாமீன் பெற முயற்சித்த வழக்​கில் இடைத்​தரகர் சுகேஷ் சந்​திரசேகருக்கு 8 ஆண்​டுகள் சிறை தண்​டனை விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தேர்​தல் ஆணை​யத்​துக்கு ரூ.50 கோடி லஞ்​சம் கொடுத்து இரட்டை இலை சின்​னம் பெற முயன்ற வழக்​கு, பிரபல தொழில​திபரிடம் பல நூறு கோடி மோசடி செய்​தது உள்​ளிட்ட பல வழக்​கு​களில் டெல்லி போலீ​சாரால் கைது செய்​யப்​பட்ட இடைத்​தரகர் சுகேஷ் சந்​திரசேகர், திகார் சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளார்.

Sukesh Chandrasekhar Sentenced to 8 Years for Impersonating Supreme Court Judge

இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு ஊழல் வழக்​கில் கைதாகி சிறையில் இருந்த போது, காவலர் ஒருவரின் செல்போன் மூலம் சிறப்பு நீதிபதி பூனம் சவுத்​ரியை தொலைபேசி​யில் தொடர்பு கொண்டு முதலில் உச்ச நீதி​மன்ற நீதிப​தி​யின் தனிச் செய​லா​ளர் எனவும், பின்​னர் அந்த நீதிப​தியே பேசுவ​தாக​வும் கூறி, சுகேஷ் சந்திரசேகருக்கு உடனடி​யாக ஜாமீன் அல்​லது இடைக்​கால ஜாமீன் வழங்க வேண்​டும். ஜாமீன் வழங்​கா​விட்​டால் கடுமை​யான விளைவு​களைச் சந்​திக்க நேரிடும் என்​று மிரட்​டல் விடுத்​துள்​ளார்.

பின்​னர் நீதிபதி பூனம் சவுத்ரி, உச்ச நீதி​மன்​றத்​தை தொடர்பு கொண்டு இதுதொடர்பாக விசா​ரித்த போது, அத்​தகைய கோரிக்கை எது​வும் விடுக்​கப்​பட​வில்லை என்​பது தெரியவந்​தது. இதையடுத்து நீதிபதி பூனம் சவுத்ரி அளித்த புகாரின் அடிப்​படை​யில் சுகேஷ் சந்திரசேகர் மீது வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டது.

இந்த வழக்கு தொடர்​பாக திஸ் ஹசாரி நீதி​மன்​றத்​தில் விசா​ரணை நடைபெற்று வந்​தது. இந்​நிலை​யில், சுகேஷ் சந்​திரசேகர் குற்​ற​வாளி என திஸ் ஹசாரி நீதி​மன்​றம் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி தீர்ப்​பு அளித்​திருந்​தது. இந்த வழக்​கில் சுகேஷ் சந்​திரசேகருக்​கான தண்​டனை விவரங்களை தலைமை குற்​ற​வியல் நடு​வர் ஹர்​ஷிதா மிஸ்ரா நேற்று அறி​வித்​தார்.

இந்​திய தண்​டனைச் சட்​டத்​தின் 170-வது பிரி​வின் கீழ் அரசு ஊழியர் போல் ஆள்​மாறாட்​டம் செய்​ததற்​கும், 189-வது பிரி​வின் கீழ் அரசு ஊழியரை மிரட்​டியதற்​கும் தலா 2 ஆண்​டு​கள் கடுங்​காவல் தண்​டனை​யும் தலா 5000 ரூபாய் அபராதமும், 507-வது பிரி​வின் கீழ் குற்​ற​வியல் மிரட்​டலுக்​காக 4 ஆண்​டு​கள் சிறை தண்​டனை​யும் என 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்​கப்​படு​கிறது.

இந்​தத் தண்​டனை​களை குற்றவாளி சுகேஷ் சந்திரசேகர் ஒன்​றன் பின் ஒன்​றாக அனுபவிக்க வேண்​டும் என்று நீதிபதி தீர்ப்​பளித்​தார். அபராதத் தொகையை செலுத்த தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் உத்தரவிட்டார்.

இந்த தண்​டனை​களை ஒரே நேரத்​தில் அனுபவிக்க அனுமதிக்க வேண்​டும் என்​றும், தனக்கு கருணை காட்ட வேண்​டும் என்​றும் சுகேஷ் சந்​திரசேகர் முன்​வைத்​த கோரிக்​கை​யை நீதிப​தி நிராகரித்​தார்​.

மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் மீது சுமார் 30 குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. பெங்களூரில் 10, சென்னையில் 9, டெல்லியில் 6, மகாராஷ்டிராவில் 2, மற்றும் ஆந்திராவில் 1 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+