"சட்டம் தனது கடமையை செய்யும்.." உச்ச நீதிமன்றம் அதிரடி! ஜந்தர் மந்தர் போராட்ட தடை விவகாரத்தில் பரபர
டெல்லி: டெல்லியில் போராட்டங்கள் நடத்த அனுமதிக்கப்பட்ட இடமாக இருந்த ஜந்தர் மந்தரின் அந்தஸ்தை டெல்லி போலீசார் ரத்து செய்தது. இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த, இது தொடர்பாக மத்திய அரசு மற்றும் டெல்லி போலீசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. மேலும், சட்டம் தனது கடைமையை செய்யும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரை போராட்டங்களுக்கான இடமாக அறிவித்திருந்த உத்தரவை டெல்லி போலீசார் ரத்து செய்தது. அங்கு போராட்டம் நடத்துவதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக சொல்லி அங்கு போராட்டங்களை நடத்த அனுமதி இல்லை என டெல்லி போலீசார் கடந்த திங்கள்கிழமை அறிவித்தது.

சட்டம் கடமையை செய்யும்
இதை எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது இந்த வழக்கு விசாரணையின் போது, "மத்திய அரசு மற்றும் டெல்லி போலீசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புகிறோம். அவர்கள் பதிலளிக்கட்டும். அவர்கள் அளிக்கும் பதில் திருப்திகரமாக இல்லாவிட்டால், சட்டம் தனது கடமையை செய்யும்" என்று குறிப்பிட்டார்.
மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ஜந்தர் மந்தரை போராட்ட இடமாக அறிவித்திருந்த உத்தரவை ரத்து செய்யும் முடிவு, வல்லுநர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
டெல்லி போலீசார்
டெல்லி போலீசார் அக்டோபர் 11ம் தேதி போராட்ட இடங்கள் குறித்து உத்தரவிட்டிருந்தது. அதில் டெல்லியில் போராட்டம் நடத்தும் இடங்கள் பட்டியலில் இருந்து ஜந்தர் மந்தர் நீக்கப்பட்டது. இனி டெல்லியில் ராம்லீலா மைதானம், புராரி மைதானம் மற்றும் கிழக்கு டெல்லியில் உள்ள சிபிடி மைதானம் ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே போராட்டங்கள் நடத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த இடங்களில் போராட்டங்களை நடத்துவதற்கான விதிகள் தனியாக வெளியிடப்படும் என்றும் டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
போராட்டங்கள்
இப்போது ராம்லீலா மைதானத்தை முன்பதிவு செய்வது மற்றும் நிர்வகிப்பது டெல்லி மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதேசமயம் ஷாதராவில் உள்ள சிபிடி மைதானம் மற்றும் புராரி மைதானம் ஆகியவை டெல்லி வளர்ச்சி ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த இரண்டு இடங்களையும் அரசியல் நடவடிக்கைகளுக்காக எப்படி ஒதுக்குவது என்பது தொடர்பான விதிமுறைகள் தற்போது உருவாக்கப்பட்டு வருகின்றன. அது முடிந்த பிறகே போராட்டங்களுக்காக புக் செய்ய முடியும்.
100 ஆண்டுகளாக போராட்டங்களின் அடையாளம்!
டெல்லியின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஜந்தர் மந்தர், நீண்ட காலமாக போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அரசியல் கோரிக்கைகளை முன்வைக்கும் முக்கிய இடமாக இருந்து வருகிறது. கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் போராட்டங்கள் மற்றும் தொடர் அமர்வுகளுக்கு ராம்லீலா மைதானம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், சிபிடி மைதானம் மற்றும் புராரி மைதானங்களில் இதுபோன்ற போராட்டங்கள் நடைபெற்றதில்லை என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே ஜந்தர் மந்தரில் போராட்டங்கள் நடத்தும் அனுமதி அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது முக்கியத்துவம் பெற்றுள்ளது. நீட் கேள்வித்தாள் லீக் விவகாரம் முதல் வாக்கு திருட்டு குற்றம்சாட்டு வரை எல்லா விவகாரங்களுமே ஜந்தர் மந்தரிலேயே போராட்டங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.




Click it and Unblock the Notifications
