“ரூ.5,000 டிக்கெட் ரூ.30,000க்கு விற்பனை.." இனி இதெல்லாம் நடக்காது.. கடிவாளம் போடும் மத்திய அரசு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பண்டிகை காலங்களில் விமான டிக்கெட் விலை வரம்பின்றி உயரும் நிலையில், அதை கட்டுப்படுத்துவதற்கான புதிய விதிகளை நவம்பர் 16ம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. புதிய விதிகளுக்கு ஒப்புதல் கிடைத்துவிட்டதாகவும், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அவை வெளியிடப்படும் என்றும் மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் விமானங்களில் பயணிப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளுக்கு செல்வது மட்டுமின்றி உள்நாட்டிலும் விமான சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தே வருகிறது. அதேநேரம் பண்டிகை அல்லது தொடர் விடுமுறை வரும்போது விமான டிக்கெட் விலை உச்சத்திற்கு போவது வாடிக்கையாகவே இருக்கிறது.

Supreme Court

விமான டிக்கெட் விலை

அதாவது சாதாரண நாட்களில் ரூ.5000க்கு இருக்கும் டிக்கெட்கள் கூட இதுபோன்ற சூழல்களில் ரூ.30,000 வரை கூட விற்கப்படுகிறது. இதற்கிடையே விமான டிக்கெட்களை முறைப்படுத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, விமான கட்டணங்களை கட்டுப்படுத்துவதற்கான விதிகள் இறுதி செய்யப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார்.

உத்தரவு

அவற்றை வெளியிடுவதற்கான நிர்வாக ஒப்புதலும் கிடைத்துள்ளதாகவும், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் விதிகள் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார். இதையடுத்து இறுதி செய்யப்பட்ட விதிகளை நவம்பர் 16ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

விமான நிறுவனங்கள் தங்களது டிக்கெட் கட்டணங்களை நிர்ணயிக்கும் நடைமுறைகள் குறித்து நீண்ட காலமாக புகார்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக, பண்டிகைக் காலங்கள் மற்றும் பயணிகளின் தேவை அதிகரிக்கும் நேரங்களில் விமானக் கட்டணங்கள் திடீரென உயர்வதும் வாடிக்கையாகவே இருந்து வருகிறது.

மிக முக்கிய தகவல்

சமூக ஆர்வலர் எஸ்.எல். லட்சுமிநாராயணன் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். விமான கட்டணங்களில் ஏற்படும் கணிக்க முடியாத மாற்றங்களைக் கட்டுப்படுத்தும் வகையில், கட்டாயமாக பின்பற்ற வேண்டிய ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார். மேலும், டிக்கெட் கட்டணங்கள் எப்படி நிர்ணயிக்கப்படுகின்றன என்பதில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க வேண்டும் என்றும் தன்னிச்சையான கட்டண உயர்வுகளை தடுக்க ஏற்பாடுகள் தேவை என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தான் இரு வாரங்களில் விமான டிக்கெட் தொடர்பாக முக்கிய விதிகளை மத்திய அரசு கொண்டு வரவுள்ளது.

விமான நிறுவனங்கள்

அதேநேரம் விமான நிறுவனங்கள் விளக்கம் வேறு விதமாக இருக்கிறது. விமான எரிபொருளான ஏவியேஷன் டர்பைன் ஃபியூல் விலை உயர்வையே டிக்கெட் விலை ஏற்றத்திற்குப் பிரதான காரணமாக சொல்கிறது. இண்டிகோ நிறுவனம் அக்டோபர் 6ம் தேதி முதல் தனது கட்டணத்தை உயர்த்தி இருந்தது. பயணிக்கும் தூரத்தை பொறுத்து உள்நாட்டு விமானங்களுக்கு ரூ.1,300 வரை இந்த கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இண்டிகோவை தொடர்ந்து ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஆகாசா ஏர் நிறுவனங்களும் இதேபோல கூடுதல் கட்டணத்தை கொண்டு வந்தது.

இந்திய விமான நிறுவனங்களுக்கு எரிபொருள் விலை தான் பெரிய தலைவலியாக இருக்கிறது. ஒரு பக்கம் எரிபொருள் விலை சர்வதேச மார்கெட்டில் உயர்கிறது. இன்னொரு பக்கம் ரூபாய் மதிப்பு சரிவதால் எரிபொருளை டாலரில் வாங்க மேலும் அதிகம் செலவாகிறது. விமான நிறுவனங்களில் ஆபரேடிங் செலவில் சுமார் 40 சதவீதம் விமான எரிபொருளுக்காக செலவிடப்படுகிறது. எனவே, எரிபொருள் விலை உயரும்போது அது பயணிகளை கடுமையாக பாதிக்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+