அனைத்து மாநிலங்களிலும்.. மாணவர்கள் மீது பதியப்பட்ட FIR ரத்து! உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடு முழுவதும் கடந்த ஜூலை 20-25ம் தேதி வரை நடந்த மாணவர் போராட்டங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட அனைத்து FIRகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

இந்த உத்தரவு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் பொருந்தும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

Supreme Court

உத்தரவின் நோக்கம்

ஜூலை 20-25 வரை நடந்த மாணவர் போராட்டங்கள் தொடர்பாக, வழக்கு இருக்கிறது.. விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று இனி எந்த மாணவரையும் அழைக்க முடியாது. இந்த வழக்குகளின் கீழ் மாணவர்கள் மீது இனி எந்த குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யவோ, நீதிமன்ற நடவடிக்கைகளை தொடரவோ முடியாது. வழக்குகள் அனைத்தும் முழுமையாக முடித்து வைக்கப்பட்டிருக்கின்றன.

ஜூலை மாத இறுதியில் நாடு முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் பெரிய அளவில் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் காவல்துறையினர் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர். பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், சட்டவிரோதமாக கூடுதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்குகளால் மாணவர்களின் கல்வி, அரசு வேலை வாய்ப்புகள் மற்றும் பாஸ்போர்ட் பெறுதல் போன்ற எதிர்கால கனவுகள் பாதிக்கப்படாமல் இருக்க இந்த தீர்ப்பு ஒரு பெரிய கேடயமாக அமைந்திருக்கிறது. அமைதியான முறையில் போராடுவதற்கான மாணவர்களின் ஜனநாயக உரிமையை இந்த தீர்ப்பு நிலை நிறுத்தியிருப்பதாக பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு மாணவரும் தனித்தனியாக அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்களுக்கு சென்று வழக்குகளை ரத்து செய்ய கோரும் நீண்ட சட்டப் போராட்டத்தை தவிர்த்து உச்சநீதிமன்றம் இந்த ஒட்டுமொத்த பொது உத்தரவை பிறப்பித்திருக்கிறது.

மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படாவிட்டால், மீண்டும் டெல்லியில் போராட்டம் நடத்துவோம் என்று கரப்பான் ஜனதா கட்சி எச்சரித்திருந்த நிலையில் தற்போது வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருககிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+