டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் லோக் ஆயுக்தா உறுப்பினர் நியமனத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பில் நியமனம் செய்யப்பட்ட, 2 உறுப்பினர் நியமனத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது தமிழக அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது.

Supreme Court refuses to remove the ban imposed on the Lokayukta Member Appointment

முன்னதாக தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவராக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தேவதாஸ் நியமிக்கப்பட்டார் மேலும் சட்டத்துறையை சேர்ந்த 2 உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகள் ஜெயபாலன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்

இந்த அமைப்பில் சட்டத்துறையை சேராத உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜாராமும், மற்றொரு உறுப்பினராக ஆறுமுகம் என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது

இதற்கு எதிராக கரூரைச் சேர்ந்த ராஜேந்திரன் உயர்நீதிமன்ற மதுரை ஐகோர்ட்டில் கிளையில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார் அதில் ராஜாராம், ஆறுமுகம் ஆகியோரின் நியமனத்தில் விதிகள் பின்பற்றப்படவில்லை. எனவே அவர்களின் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்

வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமல்படுத்தப்பட்டதை மகிழ்ச்சியுடன் வரவேற்பதாகவும், ஆனால் அதன் உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜாராம், அ.தி.மு.க.வில் உள்ள ஆறுமுகம் ஆகியோர் விதிகளுக்கு புறம்பாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியது

மோடி மீதான விமர்சனம்.. உச்ச நீதிமன்றத்தில் ராகுல் மீண்டும் வருத்தம்.. மன்னிப்பு கேட்க மறுப்பு! மோடி மீதான விமர்சனம்.. உச்ச நீதிமன்றத்தில் ராகுல் மீண்டும் வருத்தம்.. மன்னிப்பு கேட்க மறுப்பு!

எனவே அவர்கள் இருவரையும் லோக் ஆயுக்தா உறுப்பினர்களாக நியமனம் செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிப்பதாக கூறினர். லோக் ஆயுக்தா தலைவர் மற்றும் இதர உறுப்பினர்கள் செயல்பட தடையில்லை என உத்தரவிடப்பட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்து விட்டது லோக் ஆயுக்தாவில் நியமனம் செய்யப்பட்ட, 2 உறுப்பினர் நியமனத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுப்பு தெரிவித்து விட்டது.

English summary
Supreme Court has refused to ban the ban imposed on a 2 member nomination in the Lok Ayukta constituency in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X