டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Tamil Nadu: அரசு பணியில்...பதவி உயர்வுக்கான இடஒதுக்கீடு... மீண்டும் நோ சொன்ன உச்ச நீதிமன்றம்!!

Google Oneindia Tamil News

டெல்லி: தமிழ்நாடு அரசு பணியில் இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கக் கூடாது என்பதை உச்ச நீதிமன்றம் மீண்டும் உறுதிபடுத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்து இருந்த சீராய்வு மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் பணி மூப்பு ஆகியவற்றுக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் சிறப்பு ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டு வந்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதேபோல் உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது.

Supreme court rejected Tamil Nadu governments job promotion based on Reservation

இதற்கு மாற்றாக 2016ஆம் ஆண்டில் அரசு பணியாளர்கள் பணி நிபந்தனைகள் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. இதன்படி மீண்டும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பதவி உயர்வு அங்கீகரிக்கப்பட்டது.

இதையும் எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சட்ட விதிமுறைகளுக்கு புறம்பாக பின்பற்றப்பட்ட நடைமுறை செல்லாது என்றும் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்றும் கூறி கடந்தாண்டு நவம்பர் 15ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.

"நேரம் நெருங்கிருச்சு.. தலைமை ஏற்க வா".. அழகிரிக்கு அழைப்பு விடுத்த பரபர போஸ்டர்கள்.. என்னாச்சு?

சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நவீன் சின்கா தள்ளுபடி செய்தனர்.

மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்கில் முன்பு அளித்திருந்த தீர்ப்பே செல்லுபடியாகும் என்று கூறி தமிழக அரசின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது.

English summary
Supreme court rejected Tamil Nadu government's job promotion based on Reservation
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X