அதிமுக வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று என்ன உத்தரவு பிறப்பிக்குமோ? திகிலில் இபிஎஸ், ஓபிஎஸ் கோஷ்டிகள்!
டெல்லி: அண்ணா திமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. உச்சநீதிமன்றம் இன்றைய விசாரணையின் போது என்ன உத்தரவை பிறப்பிக்கும் என்பதில் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு பதைபதைப்புடன் காத்திருக்கிறது.
அதிமுகவானது ஓபிஎஸ், இபிஎஸ் என இரண்டு கோஷ்டிகளாக பிளவுபட்டுள்ளது. இதில் இபிஎஸ் கோஷ்டி ஜூலை 11-ந் தேதி சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை கூட்டியது. இந்தக் கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஹைகோர்ட் உத்தரவு
இப்பொதுக்குழுவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், ஜூலை 11-ந் தேதி இபிஎஸ் கோஷ்டி நடத்திய பொதுக்குழு செல்லாது என தீர்ப்பளித்தார். இதனை எதிர்த்து இபிஎஸ் கோஷ்டி மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. இம்மனுவை விசாரித்த நீதிபதிகள், இபிஎஸ் கூட்டிய பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்தனர்.

ஓபிஎஸ் அப்பீல்
இத்தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. இதனால் இபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் தங்களையும் கேட்டு உத்தரவு பிறப்பிக்க கோரும் கேவியட் மனுவைத் தாக்கல் செய்தது. உச்சநீதிமன்றம் அண்மையில் இவ்வழக்கை விசாரித்தது.

உச்சநீதிமன்றம் தடை
அன்றைய விசாரணையின் போது, இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் உள்ள நிலையில் பொதுச்செயலாளர் தேர்தலை ஏன் நடத்த அவசரம் காட்டப்படுகிறது? அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்த இடைக்கால தடை விதிப்பதாக நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கெய்ஷனா முராரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டிருந்தது. மேலும் இபிஎஸ் தரப்பு பதில் மனுத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.

இன்று மீண்டும் விசாரணை
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவின் அடிப்படையில், இபிஎஸ் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் ஓபிஎஸ்ஸை மிக கடுமையாக விமர்சித்துள்ளனர். அதில், அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் எனக்கு ஆதரவாக உள்ளனர். ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு அற்பமானது. அவர் அதிமுக பொதுக்குழு நடத்ததான் தடை கேட்டார். அதிமுகவின் பொதுக்குழு தீர்மானங்களுக்கு எந்த தடையும் கேட்கவில்லை. ஆகையால் ஓபிஎஸ்-ன் மேல்முறையீட்டு மனுக்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த பதில் மனு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் அதிமுக வழக்கு விசாரணை நடைபெற உள்ளது.
-
"3 எம்.எல்.ஏக்களின் பதவி விலகலை 5 நிமிடத்தில் ஏற்றது ஏன்?” சபாநாயகருக்கு அதிமுக MP இன்பதுரை கேள்வி! -
“கூவத்தூர் மாடல் மறந்து போச்சா? தோல்வியை மறைக்க அரசு மீது பழிபோடுகிறார்” - எடப்பாடிக்கு தவெக பதிலடி -
அதிமுக ரெண்டுபட்டா விஜய்க்கு தான் கொண்டாட்டம்! பஞ்சாயத்தை கூட்டிய எடப்பாடி.. வேலுமணி வைத்த டிமாண்ட்! -
அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் இசக்கி சுப்பையா.. கைப்பட கடிதம் கேட்ட சபாநாயகர் -
சென்னையில் கால் வைத்த செங்கோட்டையன்.. அடுத்து நொடி எடப்பாடிக்கு அதிர்ச்சி.. 3 அதிமுக MLAகள் ராஜினாமா -
தூய சக்தி என்றால் 3 எம்.எல்.ஏக்களையும் கட்சியை விட்டு நீக்கணும்.. விஜய்க்கு அன்புமணி வைத்த வேண்டுகோள் -
10 வருடங்களில் 5 கட்சி.. மதுரை டாக்டர் சரவணன் கடந்து வந்த அரசியல் கட்சிகள் லிஸ்ட்! -
கைய குடுங்க பங்கு.. விஜய்ய முடிச்சு விடனும்! திரைமறைவில் கைகோர்த்த திமுக -அதிமுக! உடைந்த கூட்டணிகள்! -
“திமுக உதவியுடன் ஆட்சி!” எடப்பாடி பழனிசாமியின் கேம்.. தவெகவில் இணைய காரணத்தை சொன்ன எம்எல்ஏக்கள் -
"வெறும் 2 எம்எல்ஏக்கள் தான்".. யார் அவர்கள்? மதுரை உள்பட10 தென்மாவட்டங்களில் பரிதாப நிலையில் அதிமுக -
எக்ஸ்பிரஸ் வேகம்.. 100% குதிரை பேரம்.. தவெகவில் இணைந்த 3 அதிமுக எம்எல்ஏக்கள்.. இன்பதுரை போட்ட பதிவு -
சினிமா போல ஒரே நாளில் நாட்டை மாற்ற முடியாது.. நடிகர் விஜய் குறித்து மதுரையில் வையாபுரி பேட்டி












Click it and Unblock the Notifications