மோடி சென்ற நேரம்.. 135 பேர் உயிரை பறித்த மோர்பி பால விபத்து! நவ. 14ல் விசாரிக்கும் உச்சநீதிமன்றம்
டெல்லி: குஜராத் மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்து 135 பேர் பலியாகி இருக்கும் நிலையில் அது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை வரும் நவம்பர் 14 ஆம் தேதி விசாரிக்க உள்ளது உச்சநீதிமன்றம்.
குஜராத் மாநிலம் மோர்பி பகுதியில் அமைந்து இருக்கிறது புகழ்பெற்ற தொங்கு பாலம். மச்சு ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் இந்த கேபிள் பாலம் அமைக்கப்பட்டது.
சுமார் 140 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த பழமையான கேபிள் பாலத்தில் அண்மையில் புனரமைப்பு பணிகள் நடைபெற்றது. சமீபத்தில் இந்த பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது.

மக்கள் கூட்டம்
1.25 மீட்டர் அகலம், 235 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலம் மீண்டும் திறக்கப்பட்ட பிறகு குஜராத் மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத்தளமாக இது உருவெடுத்தது. ஏராளமான மக்கள் இங்கு அதிகளவில் வருகை தருகின்றனர். குறிப்பாக தீபாவளி பண்டிகை விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக காணப்பட்டது.

அறுந்து விழுந்த பாலம்
நேற்று முந்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை காரணமாக மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் அன்றைய தினம் பாலத்தில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், இளைஞர்களும் கூட்டம் கூட்டமாக நின்றுகொண்டிருந்தனர். போகப்போக எடை அதிகரித்ததால் பாலம் எடைதாங்காமல் அறுந்து விழந்தது.

135 பேர் பலி
நேற்று முந்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை காரணமாக மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் அன்றைய தினம் பாலத்தில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், இளைஞர்களும் கூட்டம் கூட்டமாக நின்றுகொண்டிருந்தனர். போகப்போக எடை அதிகரித்ததால் பாலம் எடைதாங்காமல் அறுந்து விழந்தது.

குற்றச்சாட்டு
இதற்கிடையே மாநில அரசின் அலட்சியம் காரணமாகவும் முறையான பராமரிப்பு இல்லாததாலேயே இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறி வருகின்றனர். குறிப்பாக டிக்கெட்டுக்கு அதிக பணம் பெற்றுக்கொண்டு நிர்ணயிக்கப்பட்ட கூட்டத்தை விட அதிகமான அளவு பாலத்தில் மக்களை அனுமதித்ததால் எடை தாங்காமல் பாலம் அறுந்து விழுந்துவிட்டதாக கூறப்படுகிறது.

தொடரும் மீட்புப்பணி
தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆற்றில் மூழ்கியவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து வருவதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. விபத்துக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வரும் சூழலில், இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொள்ள 5 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

9 பேர் கைது
இந்த விபத்து தொடர்பாக 9 பேரை காவல்துறை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. குஜராத்தில் அடுத்தமாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த விபத்தால் பாஜகவுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் கூறி வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி குஜராத் சென்றிருந்த நேரத்தில் நடந்த இந்த விபத்து அக்கட்சியினரையும் அதிர்ச்சியடைய செய்து இருக்கிறது.

பிரதமர் மோடி
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரணமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று அவர் அறிவித்து இருந்தார். இந்த நிலையில் இன்று அவர் மோர்பிக்கு நேரில் சென்று பாலம் அறுந்து விழுந்த இடத்தை பார்வையிட உள்ளார். மேலும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் அவர் சந்தித்து அவர் ஆறுதல் கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உச்சநீதிமன்றம் விசாரணை
இந்த நிலையில் குஜராத் மோர்பி பாலம் விபத்து தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து உரிய விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும் என வழக்கறிஞர் விஷால் திவாரி பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார். இதனை விசாரணை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், மனுவை நவம்பர் 14 ஆம் தேதி விசாரிப்பதாக அறிவித்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications