டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிபிசி ஆவணப்படம் தடை செய்யப்பட்ட விவகாரம்.. மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பிபிசி ஆவணப்படம் தடைசெய்யப்பட்டதற்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: குஜராத் கலவரம் தொடர்பாகச் சர்வதேச ஊடகமான பிபிசி வெளியிட்டுள்ள ஆவணப்படத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குஜராத்தில் கடந்த 2002இல் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்குப் பிறகு மிகப் பெரியளவில் கலவரம் ஏற்பட்டது. இதனால் குஜராத் மாநிலமே அடுத்த சில நாட்களுக்குப் பற்றி எரிந்தது.

பல நூறு பேர் இந்த கலவரத்தில் உயிரிழந்தனர். நாடு முழுக்க இந்த கலவர சம்பவம் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் நடந்து சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.

பிபிசி ஆவணப்படம் திரையிட முயற்சி! ஜாமியா மிலியாவை அடுத்து.. உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்களும் கைது பிபிசி ஆவணப்படம் திரையிட முயற்சி! ஜாமியா மிலியாவை அடுத்து.. உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்களும் கைது

பிபிசி ஆவணப்படம்

பிபிசி ஆவணப்படம்

இதனிடையே , இந்த குஜராத் கலவரம் குறித்து பிரபல சர்வதேச ஊடகமான பிபிசி ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது. இதில் சர்ச்சைக்குரிய மற்றும் உண்மைக்கு மாறான கருத்துகள் இடம் பெற்றிருந்ததாக ஒறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இரண்டு பாகங்களாக வெளியான இந்த ஆவணப்படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து இந்த ஆவணப்படத்திற்கு மத்திய அரசு இந்தியாவில் தடை விதித்து உத்தரவிட்டது.

இன்று விசாரணை

இன்று விசாரணை

மேலும், இந்த ஆவணப்படத்தின் லிங்குகளை கொண்ட ட்வீட்களும், பதிவுகளும் சமூக வலைத்தளங்களில் இருந்தும் நீக்கப்பட்டன. அதேபோல யூடியூபில் இருந்தும் ஆவணப்படம் நீக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினரும் வழக்கு தொடர்ந்தனர். இதனிடையே பிபிசி ஆவணப்படத்திற்குத் தடை விதித்த மத்திய அரசின் முடிவை எதிர்த்துத் தொடரப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று விசாரித்தது. மேலும், இந்த ஆவணப்படத்தின் லிங்குகளை கொண்ட ட்வீட்களும், பதிவுகளும் சமூக வலைத்தளங்களில் இருந்தும் நீக்கப்பட்டன. அதேபோல யூடியூபில் இருந்தும் ஆவணப்படம் நீக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினரும் வழக்கு தொடர்ந்தனர். இதனிடையே பிபிசி ஆவணப்படத்திற்குத் தடை விதித்த மத்திய அரசின் முடிவை எதிர்த்துத் தொடரப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.

தன்னிச்சையான நடவடிக்கை

தன்னிச்சையான நடவடிக்கை

இந்து என் ராம், மஹுவா மொய்த்ரா, பிரசாந்த் பூஷன் மற்றும் வழக்கறிஞர் எம்.எல்.சர்மா ஆகியோரின் மனுக்களை இன்று சுப்ரீம் கோர்ட் விசாரித்தது.. நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. பிபிசி நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த ஆவணப்படம் மீதான தடை என்பது "தவறானது, தன்னிச்சையானது மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது" என்று கூறி வழக்கறிஞர் எம்.எல்.சர்மா என்பவரும் ஒரு பொதுநல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.

லிங்குகள் நீக்கம்

லிங்குகள் நீக்கம்

அதேபோல மூத்த பத்திரிகையாளர் இந்து என் ராம் மற்றும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் பிபிசி ஆவணப்படத்தின் லிங்குகளை அகற்றுவது தொடர்பாக மற்றொரு மனுத் தாக்கல் செய்தனர். முன்னதாக, இந்த வழக்கில் என் ராம் மற்றும் பிரசாந்த் பூஷன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சியூ சிங், அவசரக்கால அதிகாரங்களைப் பயன்படுத்தி தனது மனுதாரர்களின் ட்வீட்கள் எப்படி நீக்கப்பட்டன என்பது குறித்துக் குறிப்பிட்டார்.

உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

மேலும், பிபிசி ஆவணப்படத்தை ஒளிபரப்பிய அஜ்மீரில் உள்ள மாணவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் நடவடிக்கை குறித்தும் விளக்கினார். இதனிடையே இது தொடர்பான வழக்கு இன்று சுப்ரீம் கோர்டில் விசாரணைக்கு வந்தது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அடுத்த மூன்று வாரங்களில் இந்த விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் மாதத்திற்கு ஒத்தி வைத்தது.

English summary
BBC documentary Supreme Court to hear pleas against the ban: BBC documentary case latest updates.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X