அரசு ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ்? எகிறுதா சம்பளம்.. 8 வது ஊதியக்குழு எப்போது? மத்திய அரசு பதில் பாருங்க
டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி குறித்த எதிர்பார்ப்பு எகிறி வரும்நிலையில், அதுகுறித்து மத்திய அரசு முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு 10 வருடத்துக்கு ஒருமுறை, ஊதியக்குழு மாற்றப்படுவது வழக்கம்.. கடந்த 2013ல் 7வது ஊதியக்குழு அறிவிக்கப்பட்ட நிலையில், 8வது ஊதிய குழு (8th Pay commission) எப்போது அமைக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றன.
அறிவிப்புகள்: எனவே, அதுகுறித்த அறிவிப்புகள் மழைக்கால கூட்டத்தொடரின்போது வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதுவும் வரவில்லை. பிறகு, கடந்த பிப்ரவரி 1ம்தேதி இடைக்கால பட்ஜெட்டின்போது வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதுவும் வரவில்லை.

சம்பள திருத்தம் ஏற்பட வேண்டுமானால், சம்பள கமிஷனை உருவாக்க வேண்டியது அடிப்படையான விஷயமாக உள்ளதால், 8வது ஊதியக்குழு விரைவில் அமைக்கப்பட்டுவிடும் என்ற தகவல்களும் பரபரக்கின்றன. அதன்படி, ஃபிட்மெண்ட் காரணி 2.57 ஆகவும், அடிப்படை ஊதியம் 18000 ஆகவும் உள்ள நிலையில், 3.68 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
ஊதியக்குழு: 3.00 அல்லது 3.68 சதவீதமாக உயர்த்தினால், ரூ.18000லிருந்து ரூ.21000 அல்லது ரூ.26000 சம்பளம் உயரக்கூடும் என்றும் கணக்கிடப்பட்டு வருகிறது. அந்தவகையில், இந்த ஊதியக் குழு அமலானால், மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் பலன்கள் அனைத்தும் அதிகபட்ச நன்மைகளை பெற்று தரக்கூடும் என்பதால் எதிர்பார்ப்பு கூடிவருகிறது.
அதுமட்டுமல்லாமல், எம்பி தேர்தல் வரப்போகிறது.. இதனை கணக்கிட்டு மத்திய அரசு, விரைவில் 8வது ஊதியக்குழுவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில்தான், இது குறித்து ராஜ்யசபா எம்பி ராம்நாத் தாகூர் நிதி அமைச்சகத்திடம் கேள்விகளை கேட்டுள்ளார். அதற்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கு சவுத்ரி பதிலளிக்கும்போது, 8வது ஊதியக்குழு அமைப்புகள் தொடர்பாக அரசிடம் எந்தவித திட்டமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
8வது ஊதிய குழு: இதனால் 8வது ஊதியக்குழு அமைப்புகள் தொடர்பான ஆலோசனைகளை மேற்கொள்வதற்கு மத்திய அரசு இன்னும் சில காலம் எடுத்துக் கொள்ளும் என்றே தெரிய வருகிறது. ஆனால், 2024ம் ஆண்டு 8வது ஊதிய குழு அமைக்கப்பட்டால் தான் அடுத்த 2 வருடங்களில் அவை செயல்பாட்டுக்கு வர முடியும் என்பதால், விரைவில் மத்திய அரசு சர்ப்ரைஸ் தரும் என்றே நம்பப்படுகிறது.
இப்படித்தான், கடந்த வாரமும் மத்திய அரசு ஒரு சர்ப்ரைஸ் தந்திருந்தது.. மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு ஏற்கனவே, ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
சர்ப்ரைஸ்: ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் காலத்திற்குப் பிறகு அவர்களது கணவர் அல்லது மனைவிக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது, மத்திய அரசு ஊழியர்கள் இறக்கும் பட்சத்தில் அவர்களுக்கான ஓய்வூதியம் குழந்தைகளுக்கு வழங்கப்படும் என அதிரடியாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு ஏற்கனவே, ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் காலத்திற்குப் பிறகு அவர்களது கணவர் அல்லது மனைவிக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது, மத்திய அரசு ஊழியர்கள் இறக்கும் பட்சத்தில் அவர்களுக்கான ஓய்வூதியம் குழந்தைகளுக்கு வழங்கப்படும் என அதிரடியாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications