டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

12 ஆண்டுக்குமுன் கொரோனா வைரஸ் குறித்து எழுதிய அமெரிக்க பெண் எழுத்தாளர்.. தீர்வையும் கூறிய ஆச்சரியம்

Google Oneindia Tamil News

டெல்லி: 12 ஆண்டுகளுக்கு முன்பே கொரோனா வைரஸ் குறித்து துல்லியமாக பெண் எழுத்தாளர் ஒருவர் எழுதியுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.

Recommended Video

    கொரோனா வைரஸும்... தேவையற்ற வதந்திகளும்

    சீனாவையே புரட்டி போட்ட கொரோனா வைரஸ் தற்போது அன்டார்டிகா தவிர்த்து ஏனைய கண்டங்களில் வேகமாக பரவி வருகிறது. உலகம் முழுவதும் அச்சுறுத்தலாக இருக்கிறது.

    இந்த வைரஸ் சீனாவை விட 8 மடங்கு வேகமாக மற்ற நாடுகளில் பரவுவதாக உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்திருந்தது. இதனால் சாதாரண காய்ச்சல் என்றாலே மக்கள் அச்சம் கொண்டனர்.

    கொரோனா.. தமிழகம் வருகிறது கூடுதல் முக கவசங்கள்.. பீதி கிளப்பினால் நடவடிக்கை.. அரசு முடிவு கொரோனா.. தமிழகம் வருகிறது கூடுதல் முக கவசங்கள்.. பீதி கிளப்பினால் நடவடிக்கை.. அரசு முடிவு

    அதிகரிப்பு

    அதிகரிப்பு

    இந்தியாவில் கூட நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் பாதிப்பு ஏற்பட்டோரின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பீதி ஏற்பட்டதால் ஐடி கம்பெனிகளுக்கு பணியாற்றுவோர் வீட்டிலிருந்தபடியே பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்கள். இந்த நிலையில் இந்த வைரஸ் குறித்து 12 ஆண்டுகளுக்கு முன்பே பெண் எழுத்தாளர் ஒருவர் தனது புத்தகத்தில் எழுதியுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

     சுவாசக் குழாய்

    சுவாசக் குழாய்

    கடந்த 2008ஆம் ஆண்டு என்ட் ஆப் டேஸ் என்ற புத்தகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து அமெரிக்க பெண் எழுத்தாளர் சில்வியா பிரவுனே எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில் 312ஆவது பக்கத்தில் 2020-ஆம் ஆண்டு நிமோனியா போன்ற நோய் உலகம் முழுவதும் பரவும். இது நுரையீரலையும் சுவாசக் குழாய்களையும் அதிகமாக தாக்கும்.

    சரியாக எழுத முடியும்

    எந்த மருந்துகளாலும் அதை ஒன்றும் செய்ய முடியாது. 10 வருடங்கள் கழித்து மீண்டும் பரவி முழுவதும் மறைந்துவிடும் என அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பெண் கடந்த 2013-ஆம் ஆண்டே இறந்துவிட்டார். அவரால் எப்படி 12 ஆண்டுகளுக்கு முன்பே இந்த வைரஸ் குறித்து அதன் தாக்குதல் குறித்து இத்தனை சரியாக எழுத முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    என்ன ஆறுதல்

    என்ன ஆறுதல்

    எனினும் இதில் ஆறுதலுக்குரிய விஷயம் என்னவென்றால் இந்த நோய் 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் பரவி பின்னர் மறைந்துவிடும் என கூறியுள்ளார். எனவே அடுத்த 10ஆண்டுகளுக்குள் கொரோனாவுக்கு மருத்துவ நிபுணர்கள் மருந்து கண்டுபிடித்து விடுவர் என்பதே அந்த ஆறுதலான பதிவாகும்.

    English summary
    American Writer Sylvia Browne writes about Coronavirus in her End of Days book before 12 years. She also wrote about a reliefing issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X