வறுக்கும் வாணலியில் இருந்து நெருப்பிற்கு செல்லும் தமிழகம்... பதிவிட்ட கட்ஜூவுக்கு முகநூலில் பதிலடி
டெல்லி: தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, தேர்தல் முடிவுகள் பற்றி முகநூலில் பதிவிட்டுள்ளார். வறுக்கும் வாணலியில் இருந்து நெருப்பிற்கு தமிழகம் செல்கிறது ஹரி ஓம் என்று பதிவிட்டுள்ளார் கட்ஜூ. இவரது பதிவிற்கு முகநூலில் நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
மார்க்கண்டேய கட்ஜூ தனது முகநூல், ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டு வாங்கிக் கட்டிக்கொள்வார். சமீபத்தில் பெரியார் பற்றி பதிவிட்டது விமர்சனத்திற்கு ஆளானது.

இந்த நிலையில் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் பற்றி தனது முகநூலில் எழுதியுள்ள சில பதிவுகள் விவாதத்தை கிளப்பியுள்ளது.
நேர்மையின் எல்லை இதுதான் என்று பதிவிட்டுள்ளார் கட்ஜூ. தொடர்ந்து அவர் தனது மற்றொரு பதிவில், ஒவ்வொரு அரசியல் அமைப்பு மற்றும் அரசியல் செயற்பாடுகளின் சோதனை ஒன்று, மற்றொன்று தான். மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி, அவர்களுக்கு சிறந்த வாழ்க்கையை வழங்குகிறதா? அந்த பார்வையிலிருந்து 4 மாநிலங்களின் தேர்தல் முடிவுகளும் ஒரு யூனியன் பிரதேசமும்முற்றிலும் தொடர்பில்லாதவை என்று பதிவிட்டுள்ளார்.
இவர்கள் எப்படி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவார்கள் அல்லது அவர்களுக்கு சிறந்த வாழ்க்கை தருவார்கள்? அவர்கள் எந்த விதத்திலும் செய்வதில்லை. வறுமை, வேலைவாய்ப்பின்மை, குழந்தைத் தளர்ச்சி, விவசாயிகளின் துயரம், சரியான சுகாதாரமின்மை, பொது மக்களுக்கு நல்ல கல்வி, விலைவாசி உயர்வு, ஊழல், போன்றவை முன்பு போலவே தொடரும் என்றும் பதிவிட்டுள்ளார்.

வறுக்கும் வாணலியில் இருந்து நெருப்பிற்கு தமிழகம் செல்கிறது ஹரி ஓம் என்று கிண்டல் பதிவை போட்டிருக்கிறார். இவரது பதிவுக்கு பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். நெருப்பு விரைவில் பேய்களை அளிக்கும் என்று கூறியுள்ளார் ஒரு பதிவர்.
நன்றி, நாங்கள் எண்ணெய் வறுவலுக்கு பதிலாக தந்தூரியை விரும்புகிறோம். ஆரோக்கியத்திற்கு நல்லது. சுகாதார உணர்வில் தமிழ்நாட்டிற்கான மற்றொரு சான்று முன்னால் உள்ளது என்றும் கருத்திட்டுள்ளார் மற்றொரு முகநூல் பதிவர்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications