டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆம் ஆத்மி ஸ்டைல் அறிவிப்பு.. கெஜ்ரிவாலை பின்பற்றி ஓ.பி.எஸ் கொண்டு வரும் சூப்பர் திட்டம்.. செம!

டெல்லி ஆம் ஆத்மி அரசு அறிவிப்பை பின்பற்றி தமிழகத்தில் அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்று தமிழக அதிமுக அரசு அறிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    TN Budget 2020 | TN Budget focuses on agriculture

    டெல்லி: டெல்லி ஆம் ஆத்மி அரசு அறிவிப்பை பின்பற்றி தமிழகத்தில் அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்று தமிழக அதிமுக அரசு அறிவித்துள்ளது.

    மூன்று நாட்களுக்கு முன் டெல்லி தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் 62 இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றிபெற்றது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. பாஜக 8 இடங்களில் வென்றது. ஆம் ஆத்மியின் இந்த வெற்றியும், அவர்களின் நலத்திட்டங்களை மற்ற மாநில அரசுகளை கவர வைத்துள்ளது.

    இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியை தமிழக அதிமுக அரசும் பின்பற்ற தொடங்கி உள்ளது. தமிழக பட்ஜெட்டை இன்று காலை தாக்கல் செய்தார் துணை முதல்வர் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம். பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் அவர் தனது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 10வது முறையாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.

     தமிழக பட்ஜெட்: பள்ளி கல்வித்துறைக்கு அதிக அளவாக ரூ34,181.73 கோடி நிதி ஒதுக்கீடு தமிழக பட்ஜெட்: பள்ளி கல்வித்துறைக்கு அதிக அளவாக ரூ34,181.73 கோடி நிதி ஒதுக்கீடு

    என்ன பட்ஜெட்

    என்ன பட்ஜெட்

    அவர் தனது பட்ஜெட்டில் தமிழகத்தில் அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்று தமிழக அதிமுக அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் இந்த திட்டம் 2017ல் அறிவிக்கப்பட்டது. அதன்பின் 2018ல் இது நடைமுறைப்படுத்தப்பட்டது. டெல்லியில் கிட்டத்தட்ட 90% பேருந்துகளில் கேமரா இருக்கிறது. அங்கு தனியார் பேருந்திலும் கேமரா வைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    ஏன்

    ஏன்

    டெல்லியில் பேருந்தில் நிர்பயா கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.இந்த கொலை நாட்டையே உலுக்கியது. சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிர்பயா, சிகிச்சை பலனின்றி டிசம்பர் 29-ஆம் தேதி உயிரிழந்தார். டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட இந்த சம்பவம் நாடு முழுக்க பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    செலவு

    செலவு

    இதனால்தான் டெல்லியில் சிசிடிவி கொண்டு வரும் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்காக அங்கு 60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. தற்போது அங்கு கேமராக்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. டெல்லி ஆம் ஆத்மி அரசு அறிவிப்பை பின்பற்றி தமிழகத்தில் அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்று தமிழக அதிமுக அரசு அறிவித்துள்ளது. தனியார் பேருந்துகளிலும் இது கட்டாயமாக்கப்பட உள்ளது.

    தமிழக அறிவிப்பு

    தமிழக அறிவிப்பு

    அனைத்து பேருந்துகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த ரூ75.02 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 17500 அரசு பேருந்துகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் செயலுக்கு வந்தால் அது மிகப்பெரிய சாதனையாக இருக்கும்.டெல்லிக்கு அடுத்து தமிழகம் இரண்டாவது மாநிலமாக இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பிற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

    English summary
    Tamilnadu Budget 2020: Govt buses to get CCTV camera's soon says OPS.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X