டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவிலேயே கொரோனா தடுப்பூசியை வீணடித்த முதல் மாநிலம் தமிழகம்.. 8.83 % வீண்.. மத்திய அரசு தகவல்

Google Oneindia Tamil News

டெல்லி: கோவின் செயலி மூலம் கொரோனா தடுப்பூசி முன்பதிவு இன்று தொடங்கவுள்ள நிலையில் கொரோனா தடுப்பூசியை 8.83 சதவீதம் வீணடித்து முதலிடத்தில் தமிழகம் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி 45 வயதுக்கு மேற்பட்டவருக்கும் 40 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் மட்டுமே போடப்பட்டு வந்தது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால் வரும் மே 1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்த தடுப்பூசியை போட்டு கொள்ள ஒரே இடத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் ஆன்லைனில் முன்பதிவு கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

மே 1ம் தேதி வருகிறது ரஷ்யாவின் ஸ்புட்னிக்.. இந்தியர்களுக்கு 3வது தடுப்பூசிமே 1ம் தேதி வருகிறது ரஷ்யாவின் ஸ்புட்னிக்.. இந்தியர்களுக்கு 3வது தடுப்பூசி

ஆரோக்கிய செயலி

ஆரோக்கிய செயலி

அதன்படி கோவின் செயலி அல்லது ஆரோக்கிய சேது செயலி மூலம் இன்று முதல் முன்பதிவு தொடங்கவுள்ளது. இந்த நிலையில் மாநிலங்களில் மொத்தம் 1 கோடிக்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து உள்ள நிலையில் இருப்பு மற்றும் மருந்தை வீணடித்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் குறித்து மத்திய சுகாதாரத் துறை தகவல் அளித்துள்ளது.

உத்தரப்பிரதேசம்

உத்தரப்பிரதேசம்

அனைத்து மாநிலங்களிலும் சேர்த்து 1 கோடிக்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து டோஸ்கள் உள்ளன. அடுத்த 3 நாட்களில் கூடுதலாக 80 லட்சம் டோஸ்கள் கிடைக்கபெறும். உத்தரப்பிரதேசத்தில் 1 மில்லியன் டோஸ்கள் இருப்பு உள்ளது. இந்தியாவிலேயே அதிக டோஸ்கள் வைத்திருக்கும் மாநிலம் உத்தரப்பிரதேசமாகும்.

குஜராத்

குஜராத்

இதற்கு அடுத்து மகாராஷ்டிரா உள்ளது. இங்கு 9 லட்சம் டோஸ்களும் பீகாரில் 7.5 டோஸ்களும் தடுப்பு மருந்துகள் இருப்பு உள்ளன. மகாராஷ்டிராவில் 1.4 கோடி பேருக்கு இதுவரை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அது போல் ராஜஸ்தானில் 1.3 கோடி பேருக்கும் உத்தரப்பிரதேசத்தில் 1.23 கோடி பேருக்கும் குஜராத்தில் 1.21 கோடி பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மாநிலங்கள்

மாநிலங்கள்

அந்தமான் நிகோபார் தீவுகள், அருணாசல பிரதேசம், கோவா, ஹிமாச்சல் பிரதேசம், கேரளா, மிஸோரம், ஒடிஸா ஆகிய அரசுகள் இதுவரை கொரோனா வைரஸ் தடுப்பூசி தட்டுப்பாடு இருப்பதாக கூறவில்லை. தடுப்பூசியை அதிக அளவில் வீணடித்த மாநிலங்கள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா

இந்தியா

இந்தியாவில் அதிகபடியான தடுப்பு மருந்தை வீணடித்து முதலிடத்தில் தமிழகம் உள்ளது. இங்கு வீணடித்த சதவீதம் 8.83 ஆகும். இதைத் தொடர்ந்து அஸ்ஸாம், மணிப்பூர், ஹரியானா ஆகிய மாநிலங்கள் முறையே 7.7%, 7.4 %, 5.2 சதவீதம் மருந்துகளை வீணடித்துள்ளன. யூனியன் பிரதேசங்களில் 9.76 சதவீதம் தடுப்பு மருந்துகளை வீணடித்து முதலிடத்தில் இருப்பது லட்சத்தீவுகள்.

English summary
Tamilnadu has got first place in wasting of Coronavirus vaccine, says Centre.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X